Published:Updated:

விஜய் ரசிகர்களின் போஸ்டர்கள்... உளவுத்துறையையே குழப்பும் மதுரைக்காரர்கள்!

போஸ்டர்
போஸ்டர்

அரசியல் சென்சிட்டிவ் நகரமான மதுரையில் ஒட்டப்படும் அரசியல் ரீதியான போஸ்டர்களை உளவுத்துறை அதிகாரிகள் மிகவும் உன்னிப்பாக கவனிப்பார்கள். இங்கு போஸ்டரில் தொடங்கும் ஒவ்வொரு கருத்தும் தமிழகம் முழுதும் பிரதிபலிக்கும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் அவதானிப்பு.

மூன்று முடிச்சு ரீலீஸானபோதே 'முதல்வரே' என்று போஸ்டர் அடித்து... இன்று 'பேட்ட' படத்துக்குப் பேரப்பிள்ளைகளுடன் சென்று போஸ்டர் ஒட்டும் ரஜினி ரசிகர்களையும் மதுரை மக்கள் கண்டிருக்கிறார்கள். 'கயாமத் ஸே கயாமத் தக்' வந்தபோது அமீர்கானுக்கும், 'ஹம் ஆப்கே ஹைன் கோன்' ஓடியபோது மாதுரிக்கும் போஸ்டர் போட்டு மாற்றான் தோட்டத்து மலர்களுக்கும் மரியாதை செய்தவர்கள் மதுரைக்காரர்கள்.

அழகிரி அரசியலில் இருந்தவரை 'ஆரப்பாளையத்து அலெக்சாண்டரே', 'மாட்டுத்தாவணி மாவீரரே' என்றெல்லாம் போஸ்டர் அடித்து அலறவிடுவார்கள் உடன்பிறப்புகள். இப்போது அழகிரி அரசியலுக்கு வி.ஆர்.எஸ் வாங்கியிருக்கும் கேப்பில் விஜய்-அஜித் ரசிகர்கள் களமிறங்கியிருக்கிறார்கள். போட்டி போட்டுகொண்டு குறியீடுகளால் ஆன போஸ்டர்களை அடித்து மிஷ்கினுக்கே கிலி பிடிக்கவைக்கிறார்கள். அதிலும் விஜய் ரசிகர்கள் செய்யும் அதகளத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. கொரோனா ஊரடங்கில் அடங்கி ஒடுங்கிக் கிடந்தவர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்குத் தளர்வுக்கே நரம்புத்தளர்ச்சி வர வைக்கிறார்கள்.

மதுரையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர்
மதுரையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர்
ஈ.ஜெ.நந்தகுமார்

அரசியல் சென்சிட்டிவ் நகரமான மதுரையில் ஒட்டப்படும் அரசியல் ரீதியான போஸ்டர்களை உளவுத்துறை அதிகாரிகள் மிகவும் உன்னிப்பாக கவனிப்பார்கள். இங்கு போஸ்டரில் தொடங்கும் ஒவ்வொரு கருத்தும் தமிழகம் முழுதும் பிரதிபலிக்கும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் அவதானிப்பு. அதனால் போஸ்டர் ஏற்படுத்தும் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை அரசுக்கு முன்கூட்டியே தெரிவிப்பார்கள்.

ஆனால், சமீபகாலமாக விஜய் ரசிகர்களின் போஸ்டர்கள் வெளிப்படுத்தும் அர்த்தம் என்னவென்பது புரியாமல் உளவுத்துறையினரே குழம்புகிறார்கள், புலம்புகிறார்கள். தியாகி வ.உ.சி-யின் பிறந்த நாளுக்கு அவர் செக்கிழுத்த படத்தையும், விஜய் படத்தையும் இணைத்து 'தளபதியே நீ நினைத்தால் நற்தலைவர்களின் ஆசியுடன் தமிழகத்தில் நல்லாட்சி அமைப்பாய்' என்று கருத்துகளைப் பதிவிட்டு வ.உ.சி-யை மீண்டும் செக்கிழுக்க வைக்கிறார்கள்.

இந்த போஸ்டர்கள் மூலம் என்னதான் சொல்லவருகிறார்கள்?

- முழுமையான கட்டுரையை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > போஸ்டர் ஒட்டியே சி.எம் ஆக முடியாது விஜய் ஃபேன்ஸ்! https://bit.ly/32FM1Hf

ரியாலிட்டி ஷோக்களும் உண்மை நிலவரமும்!

42 வயதில் 'வடிவேல்' பாலாஜி மாரடைப்பால் இறந்த சோகம் இன்னும் சின்னத்திரை நட்சத்திரங்களை விட்டு அகலவில்லை. வடிவேல் பாலாஜியின் அகால மரணம் ஒரு அதிர்ச்சி என்றால், 'மருத்துவச் செலவைச் சமாளிக்க முடியாத நிலையிலா வடிவேல் பாலாஜி இருந்தார்?' என்பது இன்னொரு அதிர்ச்சியளிக்கும் கேள்வி. தொலைக்காட்சிகளில் முகம் காட்டிப் புகழ் சேர்த்த பிரபலங்கள் பொருளும் சேர்த்திருப்பார்கள் என்ற பிம்பம் உடைந்துபோனது.

அறந்தாங்கி நிஷாவிடம் பேசியபோது, ''எனக்கு ஏழு மாசக் குழந்தை இருக்கு. பொறந்த அறுபதாவது நாளிலிருந்து அதை விட்டுட்டுத்தான் ஷோ பண்ணிட்டிருக்கேன். உள்ள வர்றது முக்கியமில்லை. ஆனா, இறங்கிட்டா கடைசி வரைக்கும் போராட்டம்தான். இதை மட்டுமே நம்பினோம்னா செத்தேபோயிடுவோம்.

வடிவேல் பாலாஜி
வடிவேல் பாலாஜி

போட்டியாளரா இருக்கிற வரைக்கும் அஞ்சு பைசா கிடைக்காதுங்கிறது மட்டுமல்ல, கைக்காசு செலவு பண்ண வேண்டியிருக்கும். கலர் கலர் லைட் வெளிச்சத்தைத் தேடி விட்டில் பூச்சிகளா வந்துட்டா வேற வழியே கிடையாது. நான் பரவால்ல. பெண்ணாப் பிறந்துட்டேன். என் புருஷன் கவர்மென்ட்ல வேலை பாக்குறார். டிவியில `போதும்'னு சொல்லிட்டாங்கன்னா வீட்டோட உட்கார்ந்துடுவேன். இதுல இருக்கிற ஆண்களோட நிலையை நினைச்சுப் பாருங்க. அவங்களை நம்பிக் குடும்பம் இருக்கும். சுருக்கமாச் சொல்லணும்னா, தினக்கூலிகளைவிட மோசமானது எங்க நிலைமை'' என்றார்.

வடிவேல் பாலாஜி மாரடைப்பால் இறந்தார். அதேநேரம், வேலையின்மை, நிதிச்சுமை போன்ற பிரச்னைகள் அவருக்கும் இருந்திருக்கிறது. ஆனால் இன்னொரு புறம், இந்த லாக்டௌன் தொடங்கியது முதல் இப்போது வரை சில கலைஞர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

'ரியாலிட்டி ஷோக்களில் பங்கெடுக்கிறவர்கள் எல்லோருடைய வாழ்க்கையும் ஒரே மாதிரியாகவே இருப்பதாக பொத்தாம் பொதுவாக மதிப்பிடுவது சரியல்ல' என்கிற குரல்களும் டிவி ஏரியாவில் கேட்கின்றன.

இதுதொடர்பான முழுமையான கட்டுரையை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > வசதியாக வாழ்கிறார்களா டிவி பிரபலங்கள்? https://bit.ly/2FMTxXG

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு