Published:Updated:

`இது வெறும் ஆரம்பம்தான்!' - ரம்யாகிருஷ்ணன், கௌதம் மேனன் இணையும் `குயின்' வெப் சிரீஸ் டிரெய்லர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பல்வேறு இயக்குநர்கள் ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக்கவுள்ளதாக அறிவித்தனர். இயக்குநர் ஏ.எல்.விஜய் நடிகை கங்கனா ரணாவத்தை முன்னணி நடிகையாக வைத்து, `தலைவி' என்ற தலைப்பில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக இயக்கிவருகிறார்.

அதேபோல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி வெப் சீரிஸ் இயக்கியுள்ளது கௌதம் வாசுதேவ் மேனன் - பிரசாத் முருகேசன் கூட்டணி. MX பிளேயர் ஸ்ட்ரீமிங் நிறுவனத்துக்கு, வெப் சீரிஸாக ஜெயலலிதா வரலாற்றை இயக்கியுள்ளனர். இதில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடித்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது டிரெய்லர் வெளியாகியுள்ளது.

`` `குயின்' வெப் சீரிஸ்ல ஜெயலலிதா இல்லை... ஆனா ஜெயலலிதா மாதிரி!" - இயக்குநர் பிரசாத் முருகேசன்
அடுத்த கட்டுரைக்கு