Published:Updated:

`ஹேப்பி ஷப்னம்; வெரி ஹேப்பி ஸ்ரீதேவி!' - `ராஜா ராணி' வில்லிகளின் கம் பேக்

ஷப்னம், ஸ்ரீதேவி
ஷப்னம், ஸ்ரீதேவி

`ராஜா ராணி 2’ வரப் போவதாக சீரியல் வட்டாரங்கள் கிசுகிசுத்தன.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சீரியல் ராஜா ராணி. விறுவிறுப்பாக கதை நகர்ந்துகொண்டிருந்தபோது திடீரென எண்ட் கார்டைப் போட்டுவிட்டனர். `ராஜா ராணி 2’ வரப் போவதாக சீரியல் வட்டாரங்கள் கிசுகிசுத்தன. ஆனால், ராஜா ராணி தொடரின் நாயகன் சஞ்சீவ் கார்த்தியின் புதிய சீரியல் `காற்றின் மொழி’ வெளியானது. இதனிடையே ஆல்யா மானசா - சஞ்சீவ் திருமண வரவேற்பு நிகழ்வும் நடந்து முடிந்தது. ஆல்யா மானசா விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவுக்கு ஜட்ஜ் ஆகிவிட்டார். ராஜா ராணி சீரியலில் வில்லிகளாக மிரட்டிய ஸ்ரீதேவி மற்றும் ஷப்னம் சின்ன பிரேக் எடுத்துக்கொண்டு தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளனர்.

சஞ்சீவ் - ஆல்யா மானசா
சஞ்சீவ் - ஆல்யா மானசா

புதிய சீரியல் பற்றி ஷப்னம் நம்மிடம் பேசுகையில், ``ராஜா ராணி சீரியலுக்குப் பிறகு ஒரு சின்ன பிரேக் எடுத்துக்கிட்டேன். திருமண வாழ்க்கையை ரசிக்கணும் இல்லையா. கணவர் தினம்தினம் சப்ரைஸ் கொடுத்து அசத்துறார்.

வாழ்க்கை ஜாலியா போய்ட்டு இருக்கு. இப்போ விஜய் டிவியின் புதிய சீரியலில் கமிட் ஆகியிருக்கேன். வரும் 16 ஆம் தேதியிலிருந்து படப்பிடிப்பு ஆரம்பமாகுது. அதுவும் ரொம்ப பாசிட்டிவ் ரோலில் நடிக்கப் போறேன். அதுக்காக ரொம்ப சீரியஸ் கேரக்டரும் கிடையாது. ரொம்ப ஜாலியான பொண்ணா நடிக்கிறேன்’’ என்றார் உற்சாகமாக.

ஷப்னம்
ஷப்னம்

சன் டிவி சீரியல், போட்டோ ஷூட் என பிஸியாக இருக்கும் ஸ்ரீதேவி தற்போது புது சீரியல் ஒன்றில் கமிட்டாகியிருக்கிறார். ஸ்ரீதேவி கொடுத்த சுடசுட அப்டேட்ஸ் இதோ.. ``ராஜா ராணி சீரியல் சுவாரஸ்யமா போயிட்டிருந்தது. திடீர்னு முடியப் போகுது சீரியல் குழு சொன்னதும் ஷாக் ஆகிட்டேன். அந்த வருத்தத்துல இருந்து மீளவே கொஞ்ச நாள்கள் ஆச்சு.

எங்க டீம் அவ்வளவு ஜாலியான டீம். ராஜா ராணி டீம் மிஸ் பண்றேன். கொஞ்ச நாள் வீட்ல ஓய்வெடுத்தேன். குடும்பத்தோட நேரம் செலவிட்டேன். இப்போ புது சீரியலில் கமிட்டாகியிருக்கேன். இதுவரை நடித்த சீரியல்களில் 95% வில்லி கேரக்டரில்தான் நடிச்சிருக்கேன்.

ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி

இப்போ ரொம்ப வருஷத்துக்குப் பிறகு பாசிட்டிவ் ரோலில் நடிக்கிறேன். பொதுவா எனக்கு நெகட்டிவ் ரோல் பிடிக்கும். திடீர்னு பாசிட்டிவ் ரோல் நடிக்கணும்னு ஆசையா இருந்துச்சு. நல்ல கேரக்டர் அமைஞ்சிடுச்சு. ஒரே ஹாப்பி. இருந்தாலும் ராஜா ராணி டீமை மிஸ் பண்றேன் ’’ என்றார் மகிழ்ச்சிப் பொங்க.

அடுத்த கட்டுரைக்கு