Published:Updated:

கிருஷ்ணா மறைவு: "இந்த வருடம் மிகவும் மோசமானது" -நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா உருக்கம்!

கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா
News
கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா

இந்த வருடம் 2022-லேயே தன் அண்ணன் மற்றும் தாய், தந்தை என மூவரையும் இழந்து வாடும் நடிகர் மகேஷ் பாபுக்குத் திரையுலகினர் தங்கள் ஆறுதல்களைத் தெரிவித்துவருகின்றனர்.

Published:Updated:

கிருஷ்ணா மறைவு: "இந்த வருடம் மிகவும் மோசமானது" -நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா உருக்கம்!

இந்த வருடம் 2022-லேயே தன் அண்ணன் மற்றும் தாய், தந்தை என மூவரையும் இழந்து வாடும் நடிகர் மகேஷ் பாபுக்குத் திரையுலகினர் தங்கள் ஆறுதல்களைத் தெரிவித்துவருகின்றனர்.

கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா
News
கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா
பழம்பெரும் நடிகரும், மகேஷ் பாபுவின் தந்தையுமான நடிகர் கிருஷ்ணா (80) உடல்நலக் குறைவால் இன்று (15.11.2022) காலமானார்.

நடிகர் கிருஷ்ணா, தெலுங்குத் திரையுலகில் 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் நட்சத்திர அந்தஸ்துடன் வலம் வந்தவர். பத்மபூஷன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். மேலும், இவர் 1989-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பி-யாகவும் தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்திருந்தார். இவரின் மறைவு தெலுங்குத் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பு என்று பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமன்றி, இந்த வருடம் 2022-லேயே தன் அண்ணன் (ரமேஷ் பாபு) மற்றும் தாய் (இந்திரா தேவி) இருவரையும் இழந்த மகேஷ் பாபுக்குத் தன் தந்தையின் இந்த மரணம் மூன்றாவது பேரிழப்பு.

கிருஷ்ணா அவர்களின் மறைவு பற்றி அவரின் குடும்பத்தினர்
கிருஷ்ணா அவர்களின் மறைவு பற்றி அவரின் குடும்பத்தினர்

கிருஷ்ணா அவர்களின் மறைவு பற்றி அவர் குடும்பத்தினர், "எங்கள் அன்பான கிருஷ்ணா அவர்களின் மறைவை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவர் திரைப்படத் திரைக்கு அப்பால் பல தளங்களில் ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்தார். அன்பு, பணிவு மற்றும் இரக்கத்தால் வழிநடத்தப்பட்டவர். அவர் தனது வேலையின் மூலமாகவும், நம் மூலமாகவும், அவரால் ஈர்க்கப்பட்ட பலரின் வாழ்க்கை மூலமாகவும் என்றென்றும் வாழ்வார். எல்லாவற்றையும்விட நம்மை மிகவும் நேசித்தவர் அவர். ஒவ்வொரு நாளும் அவரை நாம் இழக்க நேரிடும்… ஆனால் பலர் சொல்வது போல், 'விடைபெறுவது என்பது என்றென்றும் இல்லை. நாங்கள் மீண்டும் அவரைச் சந்திக்கும் வரை…” என்று உருக்கத்துடன் கூறியுள்ளனர்.

இதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்துத் திரைத்துறையினரும் ரசிகர்களும் நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன், "தெலுங்கு சினிமாவின் அடையாளமாகத் திகழ்ந்த நடிகர் கிருஷ்ணா மறைந்தார். ஒரு சகாப்தம் நிறைவடைந்துள்ளது. தாய், சகோதரன் ஆகியோரின் இழப்பையடுத்து மூன்றாவது அதிர்ச்சியாகத் தற்போது தந்தையை இழந்துள்ள சகோதரர் மகேஷ் பாபுவின் துயரில் நானும் பங்குகொள்கிறேன். அன்புள்ள மகேஷ் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என்று கூறியுள்ளார்.

இதையடுத்து ரஜினிகாந்த், "நடிகர் கிருஷ்ணா அவர்களின் மறைவு தெலுங்குத் திரையுலகிற்கு ஒரு பெரிய இழப்பு. அவருடன் மூன்று படங்களில் நடித்திருக்கிறேன். அந்த நினைவுகள் நான் எப்போதும் போற்றும் நினைவுகளாகும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்... அவர் ஆன்மா சாந்தியடையட்டும்" என்று கூறியுள்ளார்.

நடிகர் சூர்யா, "கிருஷ்ணாகாருக்கு எங்களின் பிரார்த்தனைகளும், மரியாதைகளும். அவர், நிறைய அன்பையும் வலிமையையும் மகேஷ் பாபு மற்றும் அவரது குடும்பத்திற்கும் வழங்குவார். இந்த வருடம் மிகவும் கடினமான வருடமாக அமைந்துள்ளது உங்களுக்கு. நங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம்."

பிரபல திரைப்பட தயாரிப்பாளரான கலைப்புலி எஸ். தாணு, "கந்தசாமி/ மல்லண்னா படப்பிடிப்பின் போது உங்களுடன் இணைந்து பணியாற்றியதை எண்ணிப் பெருமைகொள்கிறேன். கிருஷ்ணா சார் தன்னடக்கம் கொண்ட நல்ல மனிதர். அவரின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கும் இந்தியத் திரையுலகிற்கும் நேர்ந்த பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.