Published:Updated:

`ஒரிஜினலாவே நான் வில்லன் மா!’- அதிர வைக்கும் தர்பார் டிரெய்லர்

ரஜினியின் தர்பார் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படம் உருவாகி வருகிறது. ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதையடுத்து, வெளியான `சும்மா கிழி’ சிங்கிள் டிராக் ரசிகர்களைக் கவர்ந்தது. தொடர்ந்து படத்தின் பாடல்கள் வெளியாயின. படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருவதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தர்பார் டிரெய்லர் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருத்தனர். ஆனால், அதுதொடர்பான அறிவிப்புகள் வெளியாகவில்லை. இந்த நிலையில், தர்பார் படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தர்பார் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. ரசிகர்கள் தர்பார் டிரெய்லருக்காக காத்திருந்தனர். ஆனால், 6.30 மணிக்கு டிரெய்லர் சமூகவலைதளத்தில் வெளியாகவில்லை. வெறித்தனமா வெயிட்டிங் என ரசிகர்கள் லைக்கா நிறுவனத்தை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர். படத்தின் டிரெய்லர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.