Published:Updated:

ரூ.7.25 லட்சம் மாத வாடகை! - தீபிகா படுகோனே வீட்டுக்கு அருகிலேயே வாடகை வீடு எடுத்த ரன்வீர் சிங்

4 பெட்ரூம் கொண்ட வீட்டை 3 வருடத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளார் ரன்வீர் சிங்.

ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே

உங்களிடம் சொந்தமாக வீடு இருக்கும்போது, பல லட்சங்களில் வாடகை கொடுத்து குடிபெயர்வீர்களா? மாட்டீர்கள்தானே! ஆனால், பாலிவுட் பிரபலங்களில் மிக முக்கிய ஹீரோவான ரன்வீர் சிங், மும்பையின் பிரபாதேவி பகுதியில் உள்ள 'Beaumonde Towers' என்ற அப்பார்ட்மென்டில் ஒரு பிளாட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். அதன் ஒரு மாத வாடகை 7.25 லட்சம் ருபாய்.

இதன் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால்... அதே அப்பார்ட்மென்டில் ரன்வீர் சிங் மனைவியான தீபிகா படுகோனேவுக்கு நான்கு அறைகளுடன் கூடிய சொந்தமான பிளாட் ஒன்று உள்ளது. அதை 2010-ம் ஆண்டில் ரூ.16 கோடி கொடுத்து தீபிகா வாங்கியிருக்கிறார்.
Beaumonde Towers - Mumbai
Beaumonde Towers - Mumbai

ஆனால், அந்த வீட்டில் வசிப்பதைத் தவிர்த்திருக்கும் ரன்வீர்சிங், அதே அப்பார்ட்மென்ட்டில், 4 பெட்ரூம் கொண்ட வீட்டை 3 வருடத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளார். முதல் இரண்டு வருடங்களுக்கு மாதம் 7.25 லட்சம் ரூபாயும், அடுத்த ஒரு வருடத்திற்கு 7.97 லட்சம் ரூபாயும் மாத வாடகையாகத் தரவேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இந்த வீட்டுக்குத்தான் இப்போது ரன்வீர்சிங் மற்றும் தீபிகா படுகோனே ஜோடி பால் காய்ச்சியிருக்கிறது.