அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

சச்சின் #VikatanReview

சச்சின் #VikatanReview
பிரீமியம் ஸ்டோரி
News
சச்சின் #VikatanReview

ஜாலியா ரசிக்கிற மாதிரி ஒரு ரிவ்யூ படிக்கணுமா..? இது போதும்...!

இது இன்னொரு குஷியான காதல் கதை! அரிவாள், துப்பாக்கி என ஆக்ஷன் ஹீரோவாகக் கலக்குகிற சீஸனில், விஜய்யின் கையில் மாறு தலாக கொஞ்சம் ஆறுதலாக ஒரு காதல் பொக்கே!

ஜி லு ஜி லு வென ஊட்டி குளிரில், ஜாலியான மேகம் மாதிரி திரிகிற மாணவர் விஜய். அதே கல்லூரியின் ட்ரீம் கேர்ள் ஜெனிலியா விஜய்க்கு ஜெனிலியா மீது காதல், அம்மணிக்கும் பிடிக்கிறதுதான். ஆனால், கண்டதும் காதல் என்பதில் சம்மதமில்லை. போதாக்குறைக்கு ஈகோ!

சச்சின் #VikatanReview
சச்சின் #VikatanReview

எண்ணி 30 நாட்களில், நீயே வந்து உன் காதலைச் சொல்வாய் பார் என்று சவால் விடுகிறார் விஜய் சவாலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவே விஜய்யை 30 நாட்கள் வீம்பாகத் தவிக்கவிடும் ஜெனிலியா, கடைசி நாள் தன் தொண்டைவரை ஐ லவ் யூ வந்தும்கூட சொல்லாமல், அடுத்த நாள் காதலைச் சொல்ல முடிவெடுக்கிறார். மறுநாள் அதைச் சொல்ல முடியாதபடி, சூழ்நிலை தடாலடியாக எப்படி மாறிப்போகிறது. அப்புறம் என்னதான் ஆகிறது என்பதே க்ளைமாக்ஸ்!

இந்த இரண்டே கேரக்டர்களின் இதயச் சடுகுடுவாக நகரும் படத்தை, தன் ரகளையான நடிப்பால் தாங்கி நிற்கிறார் விஜய். உடம்பெல்லாம் குறும்பு, அலட்டலான புன்னகை, மெலிதான நகைச்சுவை இழையோடும் பாடி லாங்வேஜ் எனப் பின்னியெடுக்கிறார். க்ளோஸப்களில் இன்னும் அழகு! நீ க்யூட்டா இருக்கே உன் சிரிப்பு அழகு என விஜய் வர்ணிக்கும்போது கன்னங்கள் ஆப்பிளாகி. அதை உள்ளுற ரசிக்கும் ஜெனிலியா, அடுத்த கணமே, 'ஷட் அப்' என்று முறுக்கிக் கொள்ளும்போது. இனிய ஈ.கோ!

சச்சின் #VikatanReview
சச்சின் #VikatanReview


ஜெனிலியா தன் வீட்டில், குட்டை கவுனில் வசீகரா பாட்டுக்கு ஜில் ஆட்டம் போடுவதை விஜய் மறைந்திருந்து ரசித்துவிட, காலேஜ்ல போட்டுக் குடுத்துராதே என்று கெஞ்சுகிறார் ஜெனிலியா. அடுத்த நாள் - கல்லூரியில் அதே பாட்டைப் போட்டு ஆடி, ஜெனிலியாவை அவர் வாயாலேயே குட்டை கவுன் கூத்தை உளறவைக்கிற திரைக்கதை அமைப்பு 'வெர்ரி ஸ்பெஷல்'

வடிவேலு கல்லூரி மாணவரா? என்று ஆரம்பத்தில் நம் மனதில் தோன்றுவதையே, படத்தில் விஜய்யும் கேட்கிறார். 'நானெல்லாம் சொல்லிக் கொடுத்த வாத்தியாருக்கு விசுவாசமா ஒன்பது வருஷமா ஒரே கிளாஸ்ல இருக்கறவன்' என்கிறார் வடிவேலு. இந்த செமஸ்டர் யுகத்தில், எந்தக் கல்லூரியில் ஒரே க்ளாஸில் ஒன்பது வருஷம் படிக்கவிடுகிறார்கள்?! ஜெனிலியாவிடம் தன் காதலைச் சொல்ல, விஜய்யைத் தூதுவிட்டு, வடிவேலு வாங்கிக் கட்டிக்கொள்ளும் ஒவ்வொரு சீனும் ஜாலி டப்பாஸா:

எக்கச் சக்க விளம்பரங்களால் பிரபலப்படுத்தப்பட்ட பிபாஷா பாசு. படத்துடன் ஒட்டவே இல்லை. அவர் யார்? ஏன் வருகிறார்? விஜய்யை வம்படியாக இழுத்து ஏன் ஆடிப் பாடுகிறார்! கவர்ச்சிக்காகவே கொண்டு வரப்பட்டிருந்தாலும் பிபாஷாவின் தோற்றம் நம்மை கிறங்கடிப்பதற்குப் பதிலாக லேசாக முகம் சுளிக்கவே வைக்கிறது. 30 நாளில் ஐ லவ் யூ சொல்ல வைப்பதுதான் பந்தயம். ஆனால், அதில் எந்தத் த்ரில்லும் கூட்டவில்லை. இன்னியோட பத்து நாள். இருபது பாடுகிறார்? பிறகு ஏன் வந்த வேகத்தில் நாள் முடிஞ்சு போச்சு என்று கிளம்பி மறைகிறார்? விளங்காத இடையிடையே பால் கணக்கு சொல்வதுபோல சொல்லிப் போகிறார் ஹீரோயின்.

கதை மலைப்பிரதேசத்தில் நடப்பதால் , எந் நேரமும் ஃபிரேமின் ஏதாவது ஒரு மூலையிலிருந்து பனிப் புகையை கசியவிட்டிருப்பது, ரசனையான கற்பனை. அதற்காக, கோவை ஏர்போர்ட்டிலுமா புகைவிடணும்: அதுவும் இந்தக் கோடையில் தேவிஶ்ரீ பிரசாத் இசையில் பிட் ஆஃப் சச்சின் ஸ்வீட் பூந்தி. வாடி வாடி பாட்டு குத்து பரோட்டா மற்றபடி வழக்கமாக விஜய் படப் பாடல்களில் இருக்கும் ஸ்பெஷல் துள்ளல் இதில் கொஞ்சம் கம்மி!

சச்சின் #VikatanReview

ஜீவாவின் ஒளிப்பதிவு, கோடை வெயிலுக்கு இதமான தர்பூஸ் ஜூஸ் குளிர்ச்சியோ குளிர்ச்சியாக கவிதை பாடுகிறது கேமரா! திடீர் ட்விஸ்ட்டாக வந்து நிற்கிற ரகுவரன், விஜய்யின் அப்பாவாம். உலகத்தின் டாப் டென் பணக்காரர்களில் ஒருவராம் என்னடா போனையே எடுக்கல? உங்க அம்மாவுக்கு திதி வருது. மறக்காம வந்துரு என நடுரோட்டில் பார்த்துச் சொல்லிவிட்டு, மறுநிமிஷமே காணாமல் போகிறார். அமெரிக்காவிலிருந்து வரும் அப்பாவை, ஏதோ பஸ் ஸ்டாப்பில் பிட் நோட்டீஸ் கொடுக்கிற ஆசாமி போலப் பயன்படுத்தியிருப்பது ஆனாலும் அநியாயம் அத்தனை அவசரமாக நகர்கிற அந்தக் காட்சியால், மொத்தப் படத்தின் முக்கியத் திருப்புமுனையே பலவீனப்படுகிறது.

'ஆங்காங்கே 'ஆஹா போடவைக்கிறது வசனம் மத்தவங்களைப் பாதிக்காத எந்தச் சந்தோஷமும் தப்பில்லை; 'மத்தவங்களைக் கஷ்டப்படுத்தற சின்னப் புன்னகைகூட பெரிய தப்புதான்' என பளிச் பளிச் மின்னல்கள். இப்படி பல விதங்களில் தனித்தனியாக ஸ்கோர் பண்ணுகிற டைரக்டர் ஜான், திரைக்கதையை இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக செதுக்கியிருந்தால், அடடா போடவைக்கிற அழகான காதல் கவிதை கிடைத்திருக்கும். சுத்திசுத்தி அடிக்கவில்லை விஜய். மாறாக நின்று விளையாடுகிறார். அது சரி, எல்லா நேரங்களிலும் செஞ்சுரி அடிக்கிறாரா என்ன சச்சின்!

- விகடன் விமர்சனக் குழு

(01.05.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் இருந்து...)