Published:Updated:

நயன்தாராவைத் தொடர்ந்து சமந்தாவின் பர்ஃபக்ட் பிளான்!

பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டிருக்கும் படங்களில் நடித்து வரும் சமந்தாவின் அடுத்த படம்.

சமந்தா
சமந்தா

சமந்தா, தனது 'ஓ பேபி' படத்தின் ரிலீசுக்காகக் காத்திருக்கிறார். அவர் தற்போது, '96' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் ஷர்வானந்த் இவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

`அறம்' கோபி நயினார்
`அறம்' கோபி நயினார்

நயன்தாரா நடித்த 'அறம்' படம் இயக்குநர் கோபி நாயினாருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை தந்தது. அதன் பிறகு பல முன்னணி கதாநாயகர்களுடன் இணையவிருக்கிறார் எனச் செய்திகள் வந்தன. அதைத் தொடர்ந்து, ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தை இயக்கி வந்தார். படத்தின் வேலைகள் பல காரணங்களால் தடைப்பட்டு இருக்க, பாபி சிம்ஹாவுடன் இணைந்து ஒரு படம் நடிப்பதாகச் செய்திகள் வந்தன.

Vikatan

இந்நிலையில் சமீபத்தில் ஹைதராபாத் சென்ற இயக்குநர் கோபி, சமந்தாவிடம் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவமிக்க கதை ஒன்றைக் கூறியுள்ளார். `அறம்' நயன்தாரா கதாபாத்திரம் போல் ஒரு பலம் வாய்ந்த கதாபாத்திரமாக இருப்பதால், கதையைக் கேட்ட சமந்தா குஷியாகி உடனே கால் ஷீட் தந்திருக்கிறாராம்.

சமந்தா
சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.