Published:Updated:

Kantara 2: "நீங்கள் பார்த்தது இரண்டாம் பாகம்தான். முதல் பாகம் விரைவில் வெளியாகும்!"- ரிஷப் ஷெட்டி

ரிஷப் ஷெட்டி

'காந்தாரா' படத்தின் அடுத்த பாகம் குறித்து படத்தின் வெற்றி விழாவில் ரிஷப் ஷெட்டி பேசி இருக்கிறார்.

Published:Updated:

Kantara 2: "நீங்கள் பார்த்தது இரண்டாம் பாகம்தான். முதல் பாகம் விரைவில் வெளியாகும்!"- ரிஷப் ஷெட்டி

'காந்தாரா' படத்தின் அடுத்த பாகம் குறித்து படத்தின் வெற்றி விழாவில் ரிஷப் ஷெட்டி பேசி இருக்கிறார்.

ரிஷப் ஷெட்டி

கடந்த செப்டம்பர் மாதம் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'காந்தாரா'. ரிஷப் ஷெட்டி இப்படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் அவரே நடித்தும் இருந்தார். கன்னட மொழியில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் சாதனையும் படைத்தது.

ரிஷப் ஷெட்டி
ரிஷப் ஷெட்டி

இந்நிலையில் இப்படத்தின் 100வது நாள் வெற்றி விழாவை படக்குழு கொண்டாடியது. அப்போது பேசிய ரிஷப் ஷெட்டி, "'காந்தாரா' படத்திற்கு அன்பையும், ஆதரவையும் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடவுளின் ஆசீர்வாதத்துடன் இப்படம் 100 நாள்களை நிறைவு செய்திருக்கிறது.

காந்தாரா 2
காந்தாரா 2

அதே சமயம், நீங்கள் பார்த்தது 'காந்தாரா' படத்தின் 2-ம் பாகம். இப்படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும். பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது பற்றியும், அந்தத் தெய்வத்தின் பின்னணி குறித்தும் காந்தாராவின் அடுத்த பாகத்தில் சொல்லப்படும். கதைக்கான பணி நடந்துக் கொண்டிருப்பதால் படத்தைப் பற்றிய சில விவரங்களைப் பின்னர் வெளியிடுகிறேன்" என்று ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.