Published:Updated:

`ரூ.10 கோடி செட்; நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்கள்!' - ஸ்பாட்டில் அசத்திய `Legend' சரவணன்

சரவணன்
சரவணன்

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் சரவணன் நடித்த பாடல் காட்சி குறித்த புகைப்படங்கள்தான் சோசியல் மீடியாவின் லேட்டஸ்ட் சென்சேஷன்.

ஒவ்வொரு பண்டிகையின்போது சரவணா ஸ்டோர்ஸ் நிறுவன விளம்பரங்கள் மீது பெரிய ஸ்பாட்லைட் விழும். காரணம், அதன் உரிமையாளர் சரவணன். முதலில் நடிகைகளோடு விளம்பரங்களில் தோன்றிய அவர், பின்னர் தனியாகவே விளம்பரங்களில் தோன்றி நடிக்கத் தொடங்கினார். இதனால், விரைவில் அவர் சினிமாவில் ஹீரோவாக இருக்கிறார் என்ற பேச்சுகளும் அடிபட்டன.

சரவணன்
சரவணன்

இந்தத் தகவல்களை உண்மையாக்கிய அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இரட்டை இயக்குநர்களான ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில் ஹீரோவாக சரவணன் அறிமுகமாகிறார் என்ற அறிவிப்பு வெளியானது. அஜித், விக்ரம் நடித்த உல்லாசம், விக்ரமாதித்யா, விசில் ஆகிய படங்களை இயக்கிய இந்த ஜோடியே, சரவணனின் ஆஸ்தான இயக்குநர்கள். அதேபோல், படக்குழு குறித்த தகவல்களும் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டன.

`இன்னொரு ஹீரோயின்... ஆனா அது சஸ்பென்ஸ்!'- ஹீரோவானார் அண்ணாச்சி `லெஜண்ட் சரவணன்'

படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை கீதிகா திவாரி நடிக்கிறார். வைரமுத்து பாடல் எழுத, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பிரபு, விவேக், விஜயகுமார், மயில்சாமி, நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா என பெரிய நட்சத்திரங்கள் பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

சரவணன்
சரவணன்

இந்த நிலையில், படத்துக்காக ரூ.10 கோடி செலவில் பிரமாண்டமாக செட் போட்டு பாடல் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார்கள். நடனக் கலைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் பாடல் காட்சியின் ஷூட்டிங்கின்போது, நடன அசைவுகளுக்காக பாராட்டையும் சரவணன் பெற்றிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு