Published:Updated:

`நீங்களும் நானும் ஜென்மத்திற்கும் அப்படி வாழ முடியாது' - `ஒன்பது ரூபாய் நோட்டு' குறித்து சத்யராஜ்

சத்யராஜ், கலைஞர், தங்கர்பச்சான்
News
சத்யராஜ், கலைஞர், தங்கர்பச்சான்

தங்கர்பச்சானின் 'ஒன்பது ரூபாய் நோட்டு' வெளிவந்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளதையொட்டி சத்யராஜ், தங்கர்பச்சான் இருவரும் தங்களின் நெகிழ்ச்சியான அனுபங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டனர்.

Published:Updated:

`நீங்களும் நானும் ஜென்மத்திற்கும் அப்படி வாழ முடியாது' - `ஒன்பது ரூபாய் நோட்டு' குறித்து சத்யராஜ்

தங்கர்பச்சானின் 'ஒன்பது ரூபாய் நோட்டு' வெளிவந்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளதையொட்டி சத்யராஜ், தங்கர்பச்சான் இருவரும் தங்களின் நெகிழ்ச்சியான அனுபங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டனர்.

சத்யராஜ், கலைஞர், தங்கர்பச்சான்
News
சத்யராஜ், கலைஞர், தங்கர்பச்சான்
பெரும் கவனத்திற்குள்ளாகி பாராட்டு பெற்ற தங்கர்பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் முடிந்துவிட்டது.

ங்கர் பச்சானின் நாவலை முன்வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்தை இன்று சத்யராஜ் ஞாபகத்தோடு பகிர்ந்திருக்கிறார். அதை கலைஞர் பார்த்து உள்வாங்கிய விதத்தையும் நினைவு கூர்ந்திருக்கிறார்.

தங்கர் பச்சானின் தாய் மண்ணான பத்திரக் கோட்டையில் ஆட்டு மந்தைகளுக்கு இடையில் கோவாண்டியாக அதிரவைக்கிற விதத்தில் நடித்தார் சத்யராஜ். அவருடன் பேசிய போது அந்த நினைவுகளை மறுபடியும் கொண்டு வந்து பேசினார் சத்யராஜ்.

ஒன்பது ரூபாய் நோட்டு
ஒன்பது ரூபாய் நோட்டு

"அந்தப் படத்தில் நான் மாதவப் படையாட்சியாக வாழ்ந்ததாக மக்கள் பேசினார்கள். எனக்கும் இந்த படம் வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது வில்லனாக ஆரம்பிச்சு, ஹீரோவாகி பரபரப்பாக வாழ்ந்திருக்கிறேன். ரொம்பவும்
உருப்படியாக என்னவெல்லாம் பண்ணினேன்னு உட்கார்ந்து யோசிச்சா, கணக்கு ரொம்பவே இடிக்குது. 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு', 'கடலோர கவிதைகள்', 'வேதம் புதிது', 'அமைதிப்படை'னு விரல்விட்டு எண்ணுகிற மாதிரி தான் இருக்கு.

'பெரியார்' ஆத்மார்த்தமான ஒரு கனவு. அது நிறைவேறினது தான் இப்ப மாதவ படையாட்சியாக கோவணம் கட்ட வச்சிருக்கு. ரொம்ப சத்தியமாக வாழ்ந்த மனுஷன் மாதவ படையாட்சி. பட்டியில் இருக்கிற ஆடுகள் கத்தினாலே உயிர் உடைந்து போகிற மனுஷன். நீங்களும் நானும் ஜென்மத்திற்கும் அப்படி வாழ முடியாது. அப்படி ஒரு பாத்திரத்தை கொடுத்ததும் அதில் ஒன்றிப் போயிட்டேன். சர்வதேச தரம்னு சொல்வோம் இல்லையா, அதற்கு உழைக்க முயற்சி பண்ணியதுதான் இந்தப் படம். இந்த படம் நல்ல நினைவாக இருக்கிறதுக்கும், நல்ல படமாக ஆகிப்போனதற்கும் தங்கம் பச்சான் தான் காரணம்" என்று சந்தோஷமாகப் பேசினார் சத்யராஜ்.

தங்கர்பச்சான்
தங்கர்பச்சான்

மேலும், இது குறித்து பேசிய தங்கர் பச்சான், "எனக்கு முந்திரி மணக்கிற பூமியில் மாதவ படையாட்சியை வாழ வைக்கணும்னு நினைச்சேன் இன்னிக்கு பலரும் இந்தப் படத்தை ஞாபகம் வச்சுக்கிறது நிறைவாக இருக்கு. ஒரு போராட்ட வாழ்க்கையை வாழ்ந்து பார்த்த நிம்மதி மக்களுக்கு கிடைக்கணும், உணரணும் என்ற என் நம்பிக்கை நிறைவேறி இருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. சத்யராஜ் அவர்களும் இந்தப் படத்தை நினைவு கூர்ந்த விதம் எனக்கு ஏதோ ஒரு விதத்தில் நம்ம வாழ்க்கையை ரத்தமும் சதையுமாக பதிவு செய்திருக்கோம் என்பதை உணர வைத்தது" என்றார்.

இன்னும் நாவல்கள் இதுபோல் உயிர் பெற முயற்சிகள் எடுக்கலாம்.