சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

ரீல்ஸ் பட்டாளம்: யோகேஷ் - அனாமிகா

யோகேஷ் - அனாமிகா
பிரீமியம் ஸ்டோரி
News
யோகேஷ் - அனாமிகா

இந்த விஷயத்தில் எங்களுக்கு அதிக பொறுப்பு இருக்கு. ஒரு முறை ஃபார்முலா மில்க் கொலாப ரேஷனுக்குக் கேட்டாங்க. தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழலில் ஃபார்முலா மில்க் போகலாம்

இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்ஸர்... இதுதான் இன்ஸ்டாவின் டிரெண்டிங் வார்த்தை! வெரைட்டியான வீடியோக்களைப் பதிவிட்டு தமக்கென ஒரு ஃபாலோயர்ஸைத் தக்கவைத்திருக்கும் இன்ஸ்டா செலிபிரிட்டிகளின் செல்ஃப் இன்ட்ரோதான் இந்தப் பகுதி!

சென்னையில் ஒரு கல்லூரியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட கணவன் - மனைவி இருவரும் `ரஞ்சிதமே' பாடலுக்கு நடனம் ஆடிய ரீல்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம வைரலானது. ‘யாருப்பா இவங்க இப்படி ஆடுறாங்க’ என்று தேடியபோது அது `யோகேஷ் - அனாமிகா @ அனு' ஜோடி. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டான்ஸ், நடிப்பு என்று வெரைட்டி கலந்து பெர்பாம் செய்துகொண்டிருப்பவர்களை ஒரு மாலைப்பொழுதில் சந்தித்தோம்.

யோகேஷ் - அனாமிகா
யோகேஷ் - அனாமிகா

``எங்களுடையது காதல் திருமணம். ரெண்டு பேரும் ஐ.டி கம்பெனியில் வேலை செய்தோம். இப்ப பாப்பாவைப் பார்த்துக்கணுங்கிறதனால நான் வேலையை விட்டுட்டேன். இவர் துபாய்ல வேலை பார்த்துட்டிருந்தார். லாக்டௌன் போடப் போறாங்கன்னு அங்க இருந்து அவசர அவசரமா கிளம்பி இந்தியாவுக்கு வந்தார். அவர் வந்த ஒரு மாசத்திலேயே இங்கேயும் லாக்டௌன் போட்டுட்டாங்க. எங்ககிட்ட இருந்த சேமிப்பை வச்சுதான் குடும்பத்தை ஓட்டிட்டு இருந்தோம். அந்தச் சமயத்தில்தான் இன்ஸ்டாகிராம், யூடியூப்னு எக்ஸ்ப்ளோர் பண்ண ஆரம்பிச்சோம். 9 மாசத்துல சேமிப்புப் பணம் முடியுற சமயம் கரெக்டா இவருக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் வேலை கிடைச்சது. அதைத்தான் இப்பவரை பண்ணிட்டு இருக்கார்.

ரெண்டு பேரும் கரியரை வளர்த்துக்கிறதுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஒரு பிளாட்பாரமா பயன்படுத்தலாம்ங்கிற எண்ணத்தில்தான் பேஜ் ஆரம்பிச்சோம். ரெண்டு பேரும் சேர்ந்து ஜோடியாகவும் வளரணும், அதே சமயம் தனித்தனியா அக்கவுன்ட் கிரியேட் பண்ணித் தனியாவும் நம்ம திறமையை வெளிக்காட்டணும்னு முடிவு பண்ணினோம். அதனால ரெண்டு பேரும் தனித்தனியா ஒரு பேஜும், ஜோடியா ஒரு பேஜும் வச்சிருக்கோம்’' என்ற அனுவைத் தொடர்ந்து யோகேஷ் பேசினார்.

யோகேஷ் - அனாமிகா
யோகேஷ் - அனாமிகா

“ரெண்டு பேருடைய அடையாளமும் வெளியில் தெரியணுங்கிறதுல ரொம்ப உறுதியா இருக்கோம். எனக்கு நடிப்பு ரொம்பப் பிடிக்கும். நான் ஆக்டிங் கோர்ஸ் பண்ணிட்டிருக்கேன். அதனால நடிப்பு சார்ந்த விஷயங்களை என் பேஜ்ல எக்ஸ்ப்ளோர் பண்ணுவேன். அனு மேக்கப் கோர்ஸ் படிச்சிருக்காங்க. அவங்களுக்குன்னும் சில கனவுகள் இருக்கு. அத அவங்களுடைய பேஜ்ல பண்ணிட்டிருக்காங்க. சென்னையிலுள்ள டாப் இன்ஃபுளூயன்ஸர் லிஸ்ட்ல தன் பெயர் இருக்கணும்னு அனு ஆசைப்பட்டாங்க. அது இப்ப நிறைவேறிடுச்சு.

எங்களுடைய கப்பிள் பேஜ்ல நாங்க சேர்ந்து டான்ஸ் ஆடுறது, காமெடி ரீல்ஸ் பண்ணுறது, டே டு டே லைஃப்ல நடக்குற விஷயங்களை வச்சு ரீல்ஸ் பண்ணுறதுன்னு ஏதாவது ஒரு கான்செப்ட் யோசிச்சுப் பண்ணுவோம். ஒவ்வொரு கான்செப்டுக்கும் ரொம்ப மெனக்கெடல்கள் இருக்கும். பலரும் ‘நீங்க வேலை பார்த்துட்டு பார்ட் டைம் ஆகத்தானே இதைப் பண்ணுறீங்க’ன்னு கேட்பாங்க. உண்மையில் குடும்பத்துக்காக வேலையையும், நம்ம கனவுக்காக இன்ஃபுளூயன்ஸர் என்கிற டேக்கையும் பேலன்ஸ் பண்ணுறது ரொம்பவே கஷ்டம். கான்செப்ட் வீடியோக்கள் பண்ணும்போது நான் ரொம்ப பர்ஃபெக்‌ஷன் எதிர்பார்ப்பேன். நான் நினைக்குற மாதிரி அனு நடிக்கலைன்னா நான் திருப்தி ஆகுற வரைக்கும் டேக் எடுத்துட்டே இருப்பேன். இப்ப டி.எஸ்.எல்.ஆர் கேமராவில்தான் ஷூட் பண்ணிட்டு இருக்கோம். எடிட்டிங்கையும் நானே பார்த்துக்கிறேன்’' என்றவர்களிடம் நெகட்டிவ் கமென்ட்ஸ் குறித்துக் கேட்டேன்.

யோகேஷ் - அனாமிகா
யோகேஷ் - அனாமிகா

யோகேஷ் - அனாமிகா‘‘அத நான் சொல்றேங்க’’ என்றார் அனு. ‘‘பாடி ஷேமிங் கமென்ட்ஸ் எங்களுக்கு அதிகமா வந்திருக்கு. நான் என் பொண்ணை முருகனோட ஒப்பிட்டு போஸ்ட் போடுவேன். ‘இது முருகனா, முகம் இப்படி இருக்கு’ன்னுலாம் கமென்ட் பண்ணியிருக்காங்க. இன்னும் மோசமாகூட பாப்பாவைத் திட்டியிருக்காங்க’’ என்றதும் யோகேஷ் இடைமறித்தார்.

‘‘பிக்பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ பண்ணினோம். அப்ப நிறைய மிரட்டல்கள் வந்திருக்கு. சிலர் எங்களைக் கூத்தாடின்னு சொல்லுவாங்க. பல நேரங்களில் எல்லாத்தையும் இழுத்து மூடிட்டுப் போயிடலாம்னு தோணியிருக்கு. ஆனா, அந்தச் சமயங்களிலெல்லாம் `உங்க வீடியோ பார்த்தது எனக்குள்ள இருந்த மன அழுத்தம் குறைஞ்சிருக்கு'ன்னுலாம் சிலர் அனுப்பின பாசிட்டிவ் மெசேஜ்களைப் படிப்போம். அந்த பாசிட்டிவிட்டிதான் எங்களை இன்னும் ஓட வைக்குது’’ என்றவர்களிடம் கொலாபரேஷன் குறித்துக் கேட்டதும் அனு தொடர்ந்தார்.

யோகேஷ் - அனாமிகா
யோகேஷ் - அனாமிகா

‘‘இந்த விஷயத்தில் எங்களுக்கு அதிக பொறுப்பு இருக்கு. ஒரு முறை ஃபார்முலா மில்க் கொலாப ரேஷனுக்குக் கேட்டாங்க. தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழலில் ஃபார்முலா மில்க் போகலாம். தாய்ப்பால் கொடுக்க முடியும் அல்லது வீட்டிலேயே நம்மளால ஹெல்த் மில்க் ரெடி பண்ண முடியும் என்கிற சமயத்தில் ஃபார்முலா மில்க் எப்படி சரியானதாக இருக்கும்? அதை நான் நிச்சயம் புரொமோட் பண்ண மாட்டேன். ஹேர் புராடக்ட் ஆக இருந்தால் ரெண்டு மாசம் டிரை பண்ணி ரிசல்ட் பார்த்த பிறகுதான் அத புரொமோட் பண்ணுவேன். பணம் சம்பாதிக்கணும்னு இந்தத் துறைக்குள் நாங்க வரல. அதனால எங்களுக்குப் பிடிக்காத விஷயங்களுக்கு, நாங்க டிரை பண்ணி பலன் கொடுக்காத புராடக்ட்களுக்கு வெளிப்படையா நோ சொல்லிடுவோம்’’ என்றவரின் தோள் சாய்ந்து யோகேஷ் பேச ஆரம்பித்தார்.

‘‘எங்களைப் பொதுவெளியில் பார்க்கும்போது எல்லாரும் கப்பிளாகவேதான் பார்க்கிறாங்க. தனித்தனியா எங்களையும், எங்க திறமையையும் யாரும் பார்க்கிறதில்லை. அந்த எண்ணத்தை உடைக்கணும்னுதான் தனித்தனியா ஓடிட்டு இருக்கோம். முக்கியமான நடிகர் ஒருவருடைய படத்தில் எங்களுக்கு ஜோடியாக இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைச்சது. எங்களுக்குச் சொன்ன சீன் வேற... அங்க நடந்தது வேற! திடீர்னு ஹீரோ, ஹீரோயினுக்குப் பின்னாடி எங்களை நிற்கச் சொன்னாங்க. நாங்களும் நின்னோம். காலையில இருந்து நைட் வரைக்கும் நின்னுட்டு இருந்தோம். கசப்பான அனுபவம். பெரிய நடிகருடைய படத்துல பின்னாடி ஒரு சீனுக்கு நின்னுட்டுப் போகிறதை விட சின்ன பட்ஜெட் படத்துல நமக்குன்னு முக்கியமான ஒரு கேரக்டர் இருக்குன்னா அந்தப் படத்துல கண்டிப்பா நடிக்கலாம்னு முடிவெ டுத்திருக்கோம்’’ என்றதும் இருவரிடமும் அடுத்த கட்ட திட்டம் குறித்துக் கேட்டோம்.

‘`ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு டிஜிட்டல் கம்பெனி ஆரம்பிக் கணும்னு ஆசை இருக்கு. அனுபவம் வேணும்ங் கறதால அதைப் பற்றிக் கத்துக்கிட்டு இருக்கோம்’' எனப் புன்னகைத்தனர். இருவருக்கும் வாழ்த்துகள் கூறி விடைபெற்றோம்!

யோகேஷ் - அனாமிகா
யோகேஷ் - அனாமிகா

அடிச்சுக் கேட்டாலும் எது பண்ண மாட்டீங்க?

ஆரம்பத்தில் காஸ்மெடிக் புரொமோஷன்ஸ் பண்ணிட்டு இருந்தோம். ஒரு ஃபேமஸ் பிராண்டோட குங்குமாதி தைலத்தை புரொமோட் பண்ணிட்டோம். அத பயன்படுத்திட்டு, `நீங்க சொன்னீங்கன்னு வாங்கினேன். எனக்கு பிம்பிள் வந்துடுச்சு!’ன்னு ஒருத்தங்க சொன்னாங்க. அப்பதான் ஸ்கின் கேரைப் பொறுத்தவரைக்கும் ஒருத்தருக்கு செட் ஆகுறது இன்னொருத்தருக்கு செட் ஆகாதுன்னு தெரிஞ்சது. அதிலிருந்து காஸ்மெடிக் புரொமோஷன்ஸ் பண்ண வேண்டாம்னு முடிவு பண்ணிட்டோம்.