தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

செத்தும் ஆயிரம் பொன்!

செத்தும் ஆயிரம் பொன்
பிரீமியம் ஸ்டோரி
News
செத்தும் ஆயிரம் பொன்

இணைய திரையில் இதயம் கவர்ந்தவை

றப்பின்போது பாடப்படும் ஒப்பாரி பாடலையும் அதை நிகழ்த்தும் ஒப்பனைக் கலைஞர்களையும் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் கதைதான் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் ‘செத்தும் ஆயிரம் பொன்’ திரைப்படம்.

செத்தும் ஆயிரம் பொன்
செத்தும் ஆயிரம் பொன்

ஆப்பனூர் கிராமத்தில் வசிக்கும் ஒப்பாரிக் கிழவி கிருஷ்ணவேணி. சிறுவயதில் தன் மகன் வழி பேத்தி மீராவுக்கும் உறவினர் பையனான குபேரனுக்கும் குழந்தைத் திருமணம் செய்துவைக்க நினைக்கிறார். இதில் பிரிந்து போகிறது மீராவின் குடும்பம். தன் தந்தையின் இறப்புக்குக்கூட வராத மீராவின் குடும்பத்தினர்மீது குபேரனுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இறப்பினால் ஏற்பட்ட வெறுப்பு மற்றோர் இறப்பினால் எப்படி நீர்த்துப்போகிறது என்பதையே இதில் பதிவு செய்திருக்கிறார் படத்தின் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன்.

செத்தும் ஆயிரம் பொன்!

‘சில்லுக்கருப்பட்டி’யில் மதுவாக மனம் கவர்ந்த நிவேதிதா, இதில் மீராவாக நடிப்பில் அசரடித்திருக்கிறார். “பாட்டியா நடிச்ச ஶ்ரீலேகா, அவினாஷ், கேப்ரில்லான்னு எல்லாருமே ஒரு குடும்பம் மாதிரி ஆகிட்டோம். க்ளைமாக்ஸ்ல நான் ஒப்பாரி பாடினதுக்காக என் நடிப்பை நிறைய பேர் பாராட்டினாங்க. இறந்ததுக்குப் பிறகும் நம்மகூட இருக்கப்போற ஒரு விஷயம்னா அது கலை மட்டும்தான். அது மக்கள்கிட்ட சரியா போய் சேர்ந்துருக்குங்கறதுல சந்தோஷம்” எனப் புன்னகைக்கிறார் நிவேதிதா.