Published:Updated:

`அறிமுக இயக்குநரின் குறும்படம்!’ - கஜோலுடன் இணையும் ஸ்ருதிஹாசன்

'தேவி' குறும்படம்
'தேவி' குறும்படம்

சமூகத்தின் வெவ்வேறு அடுக்குகளில் உள்ள ஒடுக்கப்பட்ட பெண்கள் குறித்தான கதை இது. ஓர் அறையில் இவர்கள் அனைவரும் வசிக்க நேர்கையில் அவர்களிடையே பகிர்ந்துகொள்ளபடும் கதைகள்தான் இந்த 'தேவி'.

வெகுஜன ரசிகர்களின் கவனம் மெயின் ஸ்ட்ரீம் சினிமாக்களைத் தாண்டி குறும்படம், சுயாதீனப்படம், வெப் சீரீஸ் பக்கமும் திரும்பி வருகிறது. இணைய உலகம் அதற்கான வாசல்களையும் உருவாக்கிவருகிறது. முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள், புதியவர்கள் என அனைவருக்குமான களமாக மாறிவரும் இதன் சமீபத்திய வரவு, கஜோலும் ஸ்ருதி ஹாசனும்.

'தேவி'
'தேவி'

இருவரும் இணைந்து 'தேவி' எனப் பெயரிடப்பட்டுள்ள குறும்படத்தில் நடிக்க உள்ளனர். அறிமுக இயக்குநர் பிரியங்கா பானர்ஜி இயக்கும் இக்குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், வியாழன் அன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தக் குறும்படம் குறித்து இயக்குநர் பிரியங்கா பானர்ஜி, "சமூகத்தின் வெவ்வேறு அடுக்குகளில் உள்ள ஒடுக்கப்பட்ட பெண்கள் குறித்தான கதை இது. ஓர் அறையில் இவர்கள் அனைவரும் வசிக்க நேர்கையில், அவர்களிடையே பகிர்ந்து கொள்ளப்படும் கதைதான் இந்த 'தேவி'" என்று தெரிவித்துள்ளார்.

Director Priyanka Banerjee
Director Priyanka Banerjee

இதில் கஜோல், ஸ்ருதியுடன் இணைந்து நீனா குல்கர்னி, ஷிவானி ரகுவன்ஷி ஆகியோரும் நடித்துள்ளனர். "பாலினப் பாகுபாடு, அதிகார துஷ்பிரயோகம், வன்முறை இதெல்லாம் அதிகமா இருக்கிற இந்தக் காலகட்டத்துல 'தேவி' மாதிரியான கதையம்சம் இருக்கக்கூடிய படங்கள் வெளிவருவது ரொம்பவே முக்கியமான விஷயம். இதுல நானும் ஒரு பங்கா இருக்கேன்கிறதுல ரொம்ப சந்தோஷம்" என்று தெரிவித்துள்ளார் கஜோல்.

``இந்தக் கதையோட கான்செப்ட் கேட்டதுமே ரொம்பப் பிடிச்சிடுச்சு எனக்கு. பெண்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் பிரச்னைகள் ஏற்படும்போது எப்படி உறுதுணையா இருக்கணும்ங்கிறதும் அவங்களுடைய பிரச்னைகளைச் சமாளிக்கிறதும்தான் இதுல பிரதானம்.

Kajol
Kajol

டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்ல முதன் முதலா வரும்போது, சிறந்த கதையைத் தேர்வுசெஞ்சு வர்றேங்கிறதுல சந்தோஷம்" என்ற மகிழ்ச்சியில் உள்ளார் ஸ்ருதி.

அடுத்த கட்டுரைக்கு