Published:Updated:

காட்சி மொழியில் ஒரு கவிதை... 5 விகடன் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்படும் `சில்லுக் கருப்பட்டி'!

இயக்குநர் மற்றும் வசனகர்த்தா ஹலீதா ஷமீம், நடிகை சுனைனா மற்றும் தயாரிப்பாளர் வெங்கடேஷ் வெளினேனி ஆகியோருக்கு வாழ்த்துகள்.

சில்லுக் கருப்பட்டி
சில்லுக் கருப்பட்டி

2019-ஐ தித்திப்பாய் முடித்து வைத்திருக்கிறது `சில்லுக் கருப்பட்டி'. பெருநகரத்தின் நெரிசல்களுக்கு மத்தியில், மின்னணுக்களின் இரைச்சல்களுக்கு இடையில், குப்பை மேடுகளின் நடுவில், மனித மனங்களில் மிச்சமுள்ள பச்சையம் எப்படி அன்பு பூக்கிறது, காதல் வளர்க்கிறது என்பதை காட்சிமொழியில் கவிதை படைத்திருக்கிறார் இயக்குநர் ஹலிதா ஷமீம்.

Sillu Karupatti
Sillu Karupatti
Sillu Karupatti
Sillu Karupatti

நம் வாழ்க்கையின் மீது நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சும் படங்கள், எப்போதும் பாராட்டுக்குரியவை. இன்னல்கள் பல சந்திப்பினும், மின்னலாக ஓர் அற்புதம் திடீரென வெட்டும். அப்படியொரு அதிசயத்தை, காலம் நமக்காகக் காத்திருந்து பரிசளிக்கும் என மனங்களைச் சலவை செய்கிறது இப்படைப்பு.

மொழியில் மென்மையும், கருத்தில் அழுத்தமும் கலந்து ஒரு கதை சொல்லல், நீரோடை போன்ற திரைக்கதை, அட்டகாசமான வசனங்கள், கச்சிதமான கதாபாத்திர வடிவமைப்பு எனத் திரையில் மாயம் புரிந்திருக்கும் திறமைக்கு மரியாதை செய்வதில் மகிழ்ச்சியடைகிறான் விகடன்.

Sillu Karupatti
Sillu Karupatti
Sillu Karupatti
Sillu Karupatti

விகடன் சினிமா விருதுகள் 2019 - ன் `சிறந்த படம்', `சிறந்த இயக்குநர்', `சிறந்த வசனம்' , ' சிறந்த குணச்சித்திர நடிகை' மற்றும் `சிறந்த தயாரிப்பு' பிரிவுகளுக்கு `சில்லுக்கருப்பட்டி'யையும் பரிந்துரைப் பட்டியலில் இணைத்து முன்மொழிகிறான் விகடன். இயக்குநர் மற்றும் வசனகர்த்தா ஹலீதா ஷமீம், நடிகை சுனைனா மற்றும் தயாரிப்பாளர் வெங்கடேஷ் வெளினேனி ஆகியோருக்கு வாழ்த்துகள்.

இந்த ஆண்டு விகடன் விருதுகளுக்கான மொத்தப் பரிந்துரைப் பட்டியல் இதோ...

வெற்றியாளரைக் கணியுங்கள்... விருது நிகழ்வுக்கான பாஸை வெல்லுங்கள்!

க்ளிக் செய்க: http://bit.ly/AVCA2019

Ananda Vikatan Cinema Awards 2019
Ananda Vikatan Cinema Awards 2019

இதில் விருது பெறப் போகிறவர் யார், விகடன் விமர்சனக் குழுவின் தேர்வு என்னவாக இருக்கும் என நீங்கள் கணித்தால் போதும். மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கில் சென்று உங்களின் வாக்குகளை இப்போதே பதிவு செய்யுங்கள். கூடவே 2019 தமிழ் சினிமா பற்றி மூன்றே வார்த்தைகளில் ஒரு பன்ச்-ம் வேண்டும். வெற்றியாளர்களுக்குச் சென்னையில் நடக்கவிருக்கும் விகடன் விருது விழாவுக்கான பாஸ் அளிக்கப்படும்.

`சிறந்த நடிகர் 2019'- ரஜினி, அஜித் டு விஜய்... இந்த 10 நடிகர்களில் இந்த ஆண்டு விகடன் விருது யாருக்கு?