Published:Updated:

'சூப்பர்ஹீரோனு ஒருத்தன் கிடையாதுனு சொல்லிருக்காங்க. ஆனா...!' சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' டிரெய்லர்

சிவகார்த்திகேயனின் `ஹீரோ' டிரெய்லர் வெளியாகியுள்ளது.

`இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவாகும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே இரும்புத்திரை' பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். அதில், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்தப் படத்துக்கு `ஹீரோ' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. பரபரக்கும் ஆக்ஷன் காட்சிகள், சூப்பர் ஹீரோ தோற்றம், ஒளிப்பதிவு, பின்னணி இசை என டிரெய்லர் ரசிகர்களை ஈர்த்துவருகிறது.

``கும்முருடப்பருனா... இம்பாசிபிள் மீம்ஸ்... ஹீரோ கஷ்டம் சூரி..!’’ - சாட் வித் சிவகார்த்திகேயன்