Published:Updated:

''சிம்புவைப் பார்த்து ஷாக் ஆகிட்டேன்!'' - எஸ்.ஜே.சூர்யா

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கும் படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்திருக்கவேண்டிய இப்படம் சில சிக்கல்களால் முடங்கியிருந்தது. இப்போது எல்லா பிரச்னைகளும் தீர்ந்து வரும் மார்ச் ரிலீஸுக்குத் தயாராகயிருக்கிறது.

'நெஞ்சம் மறப்பதில்லை' படம் குறித்தும் மற்ற சினிமாக்கள் குறித்தும் எஸ்.ஜே.சூர்யாவிடம் பேசினேன்.

கிட்டதட்ட 5 வருஷத்துக்குப் பிறகு 'நெஞ்சம் மறப்பதில்லை' ரிலீஸாகுது... எப்படி ஃபீல் பண்றீங்க?

'நெஞ்சம் மறப்பதில்லை'
'நெஞ்சம் மறப்பதில்லை'

''படம் ரிலீஸாகுறது ஒரு மேஜிக் மாதிரியான ஃபீல் கொடுத்திருக்கு. படமும் ரொம்ப ஃப்ரெஷாதான் இருக்கு. சின்ன இடைவெளிக்குப் பிறகுதான் செல்வா சாருடைய படங்கள் ஆடியன்ஸூக்கு ரீச்சாகும் . இந்த கண்ணோட்டத்துல பார்த்தா கொஞ்சம் லேட்டா வந்தாலும் 'நெஞ்சம் மறப்பதில்லை' ஆடியன்ஸூக்கு சரியான கொண்டாட்டத்தைக் கொடுக்கும். இதுல எந்த சந்தேகமும் இல்ல. படம் இப்போ ரிலீஸாகுறதை பாசிட்டிவான விஷயமாத்தான் பார்க்குறேன். 'நெஞ்சம் மறப்பதில்லை' செட்ல செல்வா ஒரு நண்பரா இருந்தார். எனக்கு நல்ல ஃப்ரெண்ட் கிடைச்சிருக்கார். இந்தப் படம் ரிலீஸாக விநியோகஸ்தர் ராக்ஃபோர்ட் முருகனாந்தம் முக்கியக் காரணம். ஏன்னா, படம் பார்த்து ரொம்பப் பிடிச்சி பெரிய நம்பிக்கை வெச்சு வாங்குறார். தயாரிப்பாளர் மதன் சாருக்கும் இதுக்காக நன்றி சொல்லணும்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராமசாமி கேரக்டர் எந்தளவுக்கு சவாலா இருந்தது?

''முதல் மூணு நாளைக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்தது. ஏன்னா, அந்த கேரக்டருடைய பாடிலாங்குவேஜை சரியா காட்டுறதுல ரொம்ப கஷ்டப்பட்டேன். அப்புறம் செல்வராகவனுக்கு என்ன வேணும்குறதை கரெக்டா ஃபாலோ செஞ்சு புடிச்சிக்கிட்டேன். படத்துல ஒரே ஷாட்ல பெரிய டயலாக் பேசியிருப்பேன். இதை நைட் ரெண்டு மணிக்கு ஷூட் பண்ணிட்டு இருந்தாங்க. இன்னும் இருபது நிமிஷத்துல டீம் பேக்கப் பண்ணணும். டேக் ஓகே ஆகாம கடைசி நிமிஷத்துல வந்து நின்னுட்டு இருந்தப்போ ஒரே டேக்ல அஞ்சு நிமிஷம் டயாலக் பேசினேன். இது மறக்க முடியாத அனுபவம்.''

பழைய 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்துக்கும் இதற்கும் எதுவும் தொடர்பு இருக்கா?

படத்தோட ஸ்க்ரிப்ட் பேப்பர்லயே 'நெஞ்சம் மறப்பதில்லை'னு பேர் இருந்தது. இது, படத்தோட ஷூட்டிங் தொடங்குனதுக்குப்பிறகு வெச்ச டைட்டில் இல்ல. டைரக்டர் ஶ்ரீதர் சாரின் 'நெஞ்சம் மறப்பதில்லை' கல்ட் படம். அந்த காலத்துலயே பெரிய பேர் வாங்குன படம். இவர் மேல பெரிய அபிமானம் செல்வா சாருக்கும், எங்களுக்கும் உண்டு. எங்க படத்தோட டைட்டிலுக்கும் பொருந்திப்போகக்கூடிய டைட்டில்தான் இது. மத்தபடி அதற்கும் இதற்கும் எதுவும் தொடர்பில்லை.''

'மாநாடு' படத்துல சிம்புவோட நடிச்சிருக்கீங்க... அந்த அனுபவம் எப்படி?

''எங்களுக்கான காம்பினேஷன் நல்லாயிருக்கும். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் கொரோனா, புயல்னு எது வந்தாலும் கலங்காம நின்னு, படத்தை கொடுக்கப் போராடியிருக்கார். ஷூட்டிங் ஸ்பாட்ல வெயிட் லாஸ் பண்ணிட்டு வந்த சிம்புவைப் பார்த்து ஷாக் ஆகிட்டேன். பயங்கர ஆச்சர்யமா இருந்துச்சு. எதிர்பாராத டிரான்ஸ்ஃபர்மேஷன். தன்னை முழுசா மாத்திட்டு வந்து நின்னார். அவரின் நடிப்பும் வேற லெவல்ல இருந்தது. எப்படி இந்தளவுக்கு உருமாறினார்னு ஆச்சரியம் தாங்கல. ஷூட்டிங் ஸ்பாட்ல ரொம்ப ஆக்டிவா இருப்பார். ஆக்‌ஷன் சொல்லிட்டா ஒரே டேக்ல முடிச்சிருவார். இந்தப் படத்தோட டீமே ரொம்ப ஜாலியா இருக்கும்.''

இன்னும் சிங்கிளா இருக்க என்ன காரணம்?

சிங்கிளா
சிங்கிளா

'' டார்கெட் நிறைய இருக்கு. சாதிக்க வேண்டியது இன்னும் இருக்கு. நடிகனாகணும்னு சினிமாவுக்கு வந்தேன். ஆனா, இயக்குநர் ஆகிட்டேன். இப்போ திரும்பவும் நடிகனா வந்துட்டேன். இதுக்கே காலம் ஓடிருச்சு. நிறைய அனுபவங்களை சினிமா கொடுத்திருக்கு. ஏற்றம் இறக்கம்னு எல்லாமே இருந்திருக்கு. இதுல சுகமும் சுமைதான். சுமையும் சுகம்தான். இந்த வாழ்க்கை நல்லாயிருக்கு.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு