எடை குறைப்பு, குழந்தை வளர்ப்பு... இது ஐஸ்வர்யா ராயின் மறுபக்கம்! #HappyBirthdayAish | The other side of Aishwarya Rai!

வெளியிடப்பட்ட நேரம்: 20:49 (01/11/2017)

கடைசி தொடர்பு:20:50 (01/11/2017)

எடை குறைப்பு, குழந்தை வளர்ப்பு... இது ஐஸ்வர்யா ராயின் மறுபக்கம்! #HappyBirthdayAish

உலக அழகி

''உனக்கு என்ன பெரிய ஐஸ்வர்யா ராய் நினைப்போ?''

 1994-ம் வருடத்துக்குப் பிறகான பெண்கள் நிச்சயம் வாழ்க்கையில் ஒரு தடவையாவது இந்தக் கேள்வியைக் கடந்திருப்பார்கள். ஐஸ்வர்யா ராய்க்கு அறிமுகம் தேவையில்லை. ஐஸ்வர்யா உலக அழகி பட்டத்தை வெல்வதற்கு முன்பும், அதன் பின்பும் இன்னும் சில இந்திய அழகிகள் பட்டத்தை வென்றதுண்டு. ஆனாலும், 'உலக அழகி' என்றதும் நம் நினைவுக்குவருவது ‘ஐஸ்வர்யா ராய்’ மட்டுமே. அந்த என்றென்றும் உலக அழகி தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

உலக அழகி

அழகுக்கு மட்டுமன்றி, அறிவு, ஆற்றல் அனைத்துமே ஐஸ்வர்யா ராயிடம் இருந்தது. ஒரு நடிகையாக 20 வருடங்களாக நிலைத்து நிற்க ஆளுமைத்திறனும் தேவை. ஒரு பெண் தொடர்ந்து ஊடக வெளிச்சத்தில் இருக்கும்போது புகழோடு பலதரப்பட்ட விமர்சனங்களையும் சந்திக்க வேண்டியதிருக்கும். அதையெல்லாம் கடந்துதான் இன்றும் ரசிகர்கள் மனதில் வீற்றிருக்கிறார். 

உலக அழகி

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனுடன் திருமணம், ஆராதியா என்ற பெண் குழந்தைக்குத் தாய் எனக் குடும்ப வாழ்க்கையில் பயணித்து சிறிய இடைவேளைக்குப் பிறகு மீடியா முன்வந்து நின்றவரைப் பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி. 'பெண்ணே உனது மெல்லிடைப் பார்த்தேன்; அடடா... பிரம்மன் கஞ்சனடி' என்ற பாடலைப் பொய்யாக்கி வந்து நிற்கிறாரே என்று கேலியும் சீரியஸான விமர்சனங்களும் றெக்கை கட்டி பறந்தன. 'இனி அவர் படங்களில் நடிக்க மாட்டார். ஐஸ்வர்யாவின் சினிமா வாழ்க்கை முடிந்தது' என வெளிநாட்டு ஊடகங்களும் வரிந்துகட்டி எழுதின. 

உலக அழகி

ஆனால், ஐஸ்வர்யா ராய் இதைப் பற்றி அலட்டிக்கொள்ளவேயில்லை. “இந்த விமர்சனங்கள் அனைத்தும் கடலில் விழும் ஒரு துளி நீர். நான் என் தாய்மையை முழுவதுமாக அனுபவித்தேன். ஒரு குழந்தையின் தாயாக என் வாழ்க்கையை ரசித்தேன். நான் ஒரு தாய். என் எடை கூடுவது பற்றி கவலைப்பட எனக்கு நேரமில்லை'' என்றார் கம்பீரமாக. இரண்டு வருடங்கள் கழித்து (2015), கட்டுக்கோப்பான உடலுடன் ‘ஜஸ்பா' என்ற இந்தித் திரைப்படத்தில் கம்பேக் கொடுத்தார். தற்போது, 'ஃபானி கான்' என்ற திரைப்படத்தில் நடித்துகொண்டிருக்கிறார்.

ஐஸ்வர்யா ராய்

மகள் ஆராதியாமீது கொள்ளை பிரியம் ஐஸூக்கு. எங்குச் சென்றாலும், குழந்தையை கையில் தூக்கிச் செல்வார். ஒருமுறை ''உங்கள் மகள், உங்கள் நேரத்தை எப்படி எடுத்துக்கொள்கிறார்?'' என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டார். ”என் மகளுக்கு நான் எப்போது வேலை செய்கிறேன் என்று தெரியும். அவள் என்னைப் பெரியதாக தொந்தரவு செய்ததில்லை. ஒருமுறை நான் அலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது, அவள் என்னிடம் வந்து, 'எக்ஸ்க்யூஸ்மீ... நான் ஒண்ணு சொல்லணும். பேசலாமா?' என்று கேட்டாள். அவ்வளவு க்யூட் என் மகள்” எனப் பூரிப்புடன் சொன்னார்.

உலக அழகி

குழந்தை வளர்ப்பில் ஐஸ்வர்யா ராய் அவ்வளவு தெளிவாக இருந்தார். ஒருமுறை அவர் மகள் படிக்கும் பள்ளி விழாவில் பேசியவர், “இங்கு நான் பேசுவதற்கு முன்பு, ஆராதியாவின் அம்மா பேசுவார் என்று குறிப்பிட்டனர். என் வாழ்வில் நான் மிகவும் ரசித்த அறிமுகம் இதுதான். குழந்தை வளர்ப்பு என்பது  நம் குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்க்கை எந்தப் பாதையில் நடத்திச்செல்வது என்று கூறும் மகத்தான விஷயம். அதனை நாம் சரியாகச் செய்கிறோமா என்று அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ளுங்கள்” என்றார்.

உலக அழகி

கடந்த மார்ச் மாதம், ஐஸ்வர்யாவின் தந்தை கிருஷ்ணாராஜ் ராய் மறைந்துவிட்டார். ஆகவே, இந்த வருடம் தன் பிறந்தநாளை கொண்டாடவில்லையாம். ஆனாலும், விஷ் யூ ஏ வெரி ஹாப்பி பர்த்டே ஐஸ்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close