நயன்தாராவின் ஸ்பெஷல் டே, சாய் பல்லவியின் ஹாட்ரிக், சன்னி லியோனின் டிவி ஷோ... #QuickSeven | Sunny Leon's programme, Nayanism, Priya Anand's new hit #QuickSeven

வெளியிடப்பட்ட நேரம்: 12:46 (27/12/2017)

கடைசி தொடர்பு:16:08 (27/12/2017)

நயன்தாராவின் ஸ்பெஷல் டே, சாய் பல்லவியின் ஹாட்ரிக், சன்னி லியோனின் டிவி ஷோ... #QuickSeven

நயன்தாராவின் முதல் படம் ரிலீஸ் ஆகி, கிறிஸ்துமஸ் தினத்துடன் 14 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன. இதைக் கொண்டாடும் விதமாக நயன்தாரா ரசிகர்கள் ட்விட்டரில் #14yearsofnayanisam என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்திருக்கிறார்கள். 2003-ம் ஆண்டு இவர் மலையாளப் படமான 'மனசினக்கர'வில் அறிமுகமானார். தொடர்ந்து சில ஆண்டுகள் மலையாளப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தவர், 2005-ம் ஆண்டு வெளியான 'ஐயா' திரைப்படத்தின் மூலம் தமிழில் தடம் பதிக்கத் தொடங்கினார். கூடவே பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, கோலிவுட்டில் அதிகச் சம்பளம் பெறும் கதாநாயகி ஆனார். 15-ம் ஆண்டு தொடங்குவதைக் கொண்டாடும் விதமாக, நேற்று நயன்தாராவின் நெருங்கிய நண்பரும் காதலருமான இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் எடுத்த புகைப்படத்தை நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குயிக் செவன்

‘ப்ரேமம்’ புகழ் சாய்பல்லவிக்குத் தற்போது தெலுங்கு மற்றும் மலையாளப் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தமிழில் விஜய்  இயக்கத்தில் வெளியாகவிருக்கும் ‘கரு’ படத்தில் நடித்து முடித்திருக்கும் சாய் பல்லவி, தனுஷ் ஜோடியாக 'மாரி-2' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடிக்கும் புதிய படத்திலும் ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

Saipallavi

தெலுங்குப் படமான ‘அர்ஜுன் ரெட்டி’ கதாநாயகியாக ஷாலினி பாண்டே தற்போது ஜீவாவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது சுந்தர் சி-யின் ‘கலகலப்பு-2’ படத்தில் ஜீவா நடித்துமுடித்துள்ள நிலையில், அடுத்த மாதத்திலிருந்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. இது ஜீவாவின் 29-வது படம். இப்படத்தின் டைட்டில் இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும், ஷாலினி பாண்டே ஜி.வி பிரகாஷ் நடிக்கும் '100% காதல்' திரைப்படத்தில் கதாநாயகியாக  நடித்துக்கொண்டிருக்கிறார். இது தெலுங்குத்  திரைப்படமான '100% லவ்' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஷாலினி பாண்டே

டிஸ்கவரியின் புகழ்பெற்ற ‘மேன் Vs வைல்டு’ நிகழ்ச்சியின் ஹிந்தி வெர்சனை சன்னி லியோன் தொகுத்து வழங்கவுள்ளார். ‘டிஸ்கவரி ஜீத்’ சேனலில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதுபற்றி சன்னி லியோன் கூறியதாவது, “டிஸ்கவரியின் பிரபல நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதன் மூலம், இன்னும் என்னை நான் பிரபலப்படுத்திக்கொள்ள முடியும். நிகழ்ச்சியை இதுவரை பார்த்திராதவர்களைக்கூட என்னால் பார்க்க வைக்க முடியும்" என்று கூறியுள்ளார். 

Sunny Leone

'காயம்குளம் கொச்சுண்ணி' என்ற மலையாளப் படத்தில் நிவின்பாலி ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கிறார், ப்ரியா ஆனந்த். கெளதம் ராமச்சந்திரன் இயக்கும் இப்படத்துக்கான ஷூட்டிங் தற்போது காசர் கோட்டில் நடந்துகொண்டிருக்கிறது. 

Amala Paul

பிரதீப் எம் நாயர் இயக்கத்தில் வெளியாகி தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் 'விமானம்'. இப்படம், தனது விமானத்தைத் தானே உருவாகிக்கொண்ட சஜி தாமஸின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், கிறிஸ்துமஸ் தினத்தன்று கேரளாவில் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் இப்படம் இலவசமாகத் திரையிடப்பட்டது. இதன்மூலம் வசூலான பணத்தை சஜி தாமஸுக்குக் கொடுக்கவிருக்கிறது, 'விமானம்' படக்குழு.  

Vimaanam

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மற்றும் நடிகையுமான குஷ்பு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து, “ஜெயலலிதாவைவிட டி.டி.வி.தினகரன் சிறந்த அரசியல்வாதி கிடையாது. இவர் வெற்றி பெற்றதற்குப் பணமே காரணம். ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடா தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை.

kushboo

ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஜெயலலிதாவுக்குச் செய்த துரோகத்தால் ஆர்.கே.நகரில் டி.டி.வி தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.” என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close