உச்சம்.. உற்சாகத்தில் அனுஷ்கா !

தன் கிராஃப் இப்போது உச்சத்தில் இருப்பதால் உற்சாகத்தில் இருக்கிறார் அனுஷ்கா

பிரபாஸ் உடன் இணைந்து MIRCHI படத்தில் இணைந்து நடித்தார் அனுஷ்கா. அதனைத் தொடர்ந்து பிரபாஸ் உடன் மீண்டும் ஒரு படத்தில்  இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

'ஈகா' படத்தினைத் தொடர்ந்து ராஜமெளலி இயக்கும் படத்தில் பிரபாஸ் - அனுஷ்கா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். பிரபாஸ் உடன் அனுஷ்கா இணையும் மூன்றாவது படமாகும் இது.

ராஜமெளலி தனது படத்தில் வில்லனாக நடிக்க ராணாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.  

பிற கதாபாத்திரங்களுக்கு நடிகர்களை தேர்வு செய்து வரும் ராஜமெளலி தனது ஃபேஸ்புக் இணையத்தில், நடிக்க விருப்பம் உள்ளவர்கள்  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை casting@arkamediaworks.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு அறிவித்து இருக்கிறார். அனுஷ்காவோடு நடிக்க கசக்குமா என்ன ?

இப்படம் மட்டுமன்றி குணசேகர் இயக்கத்தில் 3D-யில் உருவாக இருக்கும் 'ருத்ரம்மா தேவி' படத்திலும் அனுஷ்கா நடிக்க இருக்கிறார்.

தமிழிலும் தெலுங்கிலும் வெளியாக இருக்கும் 'இரண்டாம் உலகம்' இந்த வருடத்தில் தன் நடிப்புத் திறமையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இருக்கும் என்பதிலும் தீவிர நம்பிக்கையோடு இருக்கிறார் அனுஷ்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!