ரஜினி ஆர்வம் காட்டும் பாட்ஷா ரீமேக்! | தனுஷ், ரஜினி, BAADHSHAH, ஜுனியர் என்.டி.ஆர்

வெளியிடப்பட்ட நேரம்: 14:07 (27/05/2013)

கடைசி தொடர்பு:14:07 (27/05/2013)

ரஜினி ஆர்வம் காட்டும் பாட்ஷா ரீமேக்!

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்த 'பாட்ஷா'  திரைப்படம் தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. அதே பெயரில் ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பில் சமீபத்தில் ஒரு படம் வெளியானது. இரண்டு படங்களும் பெயரில் மட்டும் தான் ஒன்றே தவிர, கதைகளங்கள் வெவ்வேறு.

ஜுனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்த அப்படத்தினை சீனு வாட்லா இயக்கி இருந்தார். தமன் இசையமைத்த இப்படம் ஆந்திராவில் வசூலை வாரிக் குவித்தது.

சமீபத்தில் அப்படத்தினைப் பார்த்த ரஜினிகாந்த், படக்குழுவினரை வெகுவாக பாராட்டி இருக்கிறார். அதுமட்டுமன்றி படக்குழுவினரிடம் பேசி,  தென்னந்திய ரீமேக் உரிமையை வாங்கி அதில் தனுஷை நடிக்க வைக்க ஆர்வமாக இருக்கிறாராம்.

தற்போது மரியான், இந்தியில் RAANJHANAA, நையாண்டி, கே.வி.ஆனந்த் படம் என தனுஷின் திரையுலக வாழ்க்கை உச்சத்தில் இருப்பதால், அவர் இப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறாராம் ரஜினி.

அதுமட்டுமன்றி BAADSHAH ரீமேக்கில் தனுஷ் நடித்தால், RAANJHANAA படத்தின் மூலம் தனுஷிற்கு கிடைத்து இருக்கும் இந்தி மார்க்கெட்டை கணக்கில் கொண்டு தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளிலும் வெளியிட்டு விடலாம் என்பது தான் ரஜினியின் திட்டம்.

BAADSHAH படத்தின் கதை என்ன தெரியுமா.. 'காக்கி சட்டை' படத்தின் இன்னொரு பரிமாணம் தான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close