புதுக்கூட்டணியில் 'அனாமிகா' | அனாமிகா, நயன்தாரா

வெளியிடப்பட்ட நேரம்: 14:16 (27/05/2013)

கடைசி தொடர்பு:14:16 (27/05/2013)

புதுக்கூட்டணியில் 'அனாமிகா'

இந்தியில் வித்யா பாலன் நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற படம் 'Kahaani'. இப்படத்தினை தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் சேகர் கமுலா இயக்கி வருகிறார். படத்திற்கு 'அனாமிகா' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

வித்யாபாலன் வேடத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். ENDEMOL நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது. ஹைதராபாத்தில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சேகர் கமுலா முதன் முறையா ரீமேக் படத்தினை இயக்கி வருவது மட்டுமன்றி இரண்டு புதுமுயற்சிகளை எடுத்து இருக்கிறார். முதன் முறையாக திரைக்கதை அமைக்கும் பணியில் பிரபல தெலுங்கு நாவலாசிரியர் Yandamuri Veerendranath த்துடன் கூட்டணி சேர்ந்து இருக்கிறார்.

இரண்டாவது படத்தின் இசைக்கு கீராவாணியுடன் கூட்டணி அமைத்து இருக்கிறார். இவ்விரண்டு முயற்சியையும் அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். ஏனென்றால் இதுவரை புதுமுக இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி இருக்கிறார் சேகர். அனைத்து படங்களுமே இசைக்கு பெரும் வரவேற்பு கிடைத்த படங்கள்.

KAHAANI படத்தில் பின்னணி இசைக்கு அனுபவம் உள்ளவர் தேவைப்படுவதால் தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறார் சேகர் என்கிறார்கள் திரையுலகில்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்