குத்துபாடல் பாடும் பவன் கல்யாண் | பவன் கல்யாண், த்ரிவிக்ரம், Attarintiki Daaredhi

வெளியிடப்பட்ட நேரம்: 14:22 (27/05/2013)

கடைசி தொடர்பு:14:22 (27/05/2013)

குத்துபாடல் பாடும் பவன் கல்யாண்

பின்னணி பாடகராக இல்லாவிட்டாலும் அவ்வப்போது பாடல்கள் பாடி வருபவர் பவன் கல்யாண். தான் நடித்து வரும் படங்களுக்கு தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் இயக்குனர்கள் கேட்டு கொண்டால் உடனே பாடிக் கொடுப்பார்.

அவரது நடிப்பில் வெளியான 'Tammudu' மற்றும் 'Khushi' ஆகிய படங்களில் பாடி இருக்கிறார். 'Jhonny' படத்தில் இரண்டு பாடல்களை பாடி இருக்கிறார். தற்போது மீண்டும் பாடகராகி இருக்கிறார் பவன் கல்யாண்.

தற்போது பவன் கல்யாண் - த்ரிவிக்ரம் இணைப்பில் 'Attarintiki Daaredhi' என்ற படம் தயாராகி வருகிறது. இப்படத்தில்  இடம் பெறும் ஒரு குத்துப் பாடலில் யாரை பாட வைக்கலாம் என்று இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் தீவிர ஆலோசனையில் இருக்க, பவன் கல்யாணை பாட வைக்கலாமே என்று த்ரிவிக்ரம் ஐடியா கொடுத்து இருக்கிறார்.

தேவி ஸ்ரீபிரசாத் சம்மதம் தெரிவிக்க, பவன் கல்யாணை அழைத்து பாட வைத்து இருக்கிறார்கள். இப்பாடல் பவன் கல்யாண் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெரும் வகையில் அமைந்து இருக்கிறதாம்.

'Attarintiki Daaredhi' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஸ்பெயினில் தொடங்க இருக்கிறது. அங்கு படப்பிடிப்பு தொடங்கும் முன்பு படத்தின் FIRST LOOK POSTERஐ வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

அடுத்த மாதம் 5ம் தேதி ஸ்பெயினில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது என்று தயாரிப்பாளர் அறிவிக்கவே, தற்போது FIRST LOOK POSTER தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close