ராஜமெளலியின் மறுப்பு! | ராஜமெளலி, பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ்

வெளியிடப்பட்ட நேரம்: 14:29 (27/05/2013)

கடைசி தொடர்பு:14:29 (27/05/2013)

ராஜமெளலியின் மறுப்பு!

இன்னும் ஒரு நாள் கூட படப்பிடிப்பு தொடங்காமல், படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன, அதற்குள் 'BAHUBALI' படத்தினைத் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்யராஜ் மற்றும் பல்வேறு திரை நட்சத்திரங்கள் நடிக்க ராஜமெளலி இயக்க இருக்கும் படம் தான் 'BAHUBALI'. இப்படத்தினை சுமார் 75 கோடி பட்ஜெட்டில் ஆர்க் மீடியா தயாரிக்க இருக்கிறது. கீராவாணி இசையமைக்க, செந்தில் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.

முதன் முறையாக இப்படத்தில் ராஜமெளலியிடம் கைகோர்க்க இருக்கிறார் கலை இயக்குனர் சாபு சிரில். விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் ராஜமெளலி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. அதற்கு அவர் தனது ஃபேஸ்புக்கில் ஒரு புகைப்படத்தினை வெளியிட்டதுதான் காரணமாக அமைந்தது.

இச்செய்தியினை மறுத்து " நான் BAHUBALI படத்தில் நடிக்கவில்லை. அப்படம் 3 வருடங்களுக்கு முன்பு எடுத்த படம். நான் சும்மா அப்படத்தினை வெளியிட்டேன் அவ்வளவ தான். " என்று தெரிவித்து இருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்