வெளியிடப்பட்ட நேரம்: 17:33 (28/05/2013)

கடைசி தொடர்பு:17:33 (28/05/2013)

வெளிநாடுகளில் ஹிட்டடிக்கும் 'Iddarammayilatho'

'Iddarammayilatho' படக்குழு தற்போது பெரும் உற்சாகத்தில் இருக்கிறது. வெளிநாடுகளில் மட்டும் சுமார் 175 திரையரங்குகள் இப்படம் வெளியாக இருக்கிறது.

அல்லு அர்ஜுன், அமலா பால், கத்ரீன் த்ரஷா நடிக்க, பூரி ஜெகந்நாத் இயக்கி இருக்கும் படம் 'Iddarammayilatho'. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் தான் தற்போது இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

இப்படம் 30ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தினை பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்தில் சில காட்சிகளை நீக்கிவிட்டு படத்திற்கு U/A சான்றிதழ் அளித்து இருக்கிறார்கள்.

அதுமட்டுமன்றி படம் பார்த்த சென்சார் அதிகாரிகளும் படத்தினைப் பற்றி நல்லவிதமாக கூறவே, படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது. படமும் வெளிநாடுகளில் மட்டும் சுமார் 175 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

அல்லு அர்ஜுன் படங்களில், வெளிநாடுகளில் அதிகமான திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் 'Iddarammayilatho' தான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்