இந்தியில் என்ட்ரியாகும் அனுஷ்கா! | அனுஷ்கா, Baahubali, பிரபாஸ், எஸ்.எஸ்.ராஜமெளலி

வெளியிடப்பட்ட நேரம்: 13:36 (31/05/2013)

கடைசி தொடர்பு:13:36 (31/05/2013)

இந்தியில் என்ட்ரியாகும் அனுஷ்கா!

தமிழ், தெலுங்கு என ரசிகர்களை கிறங்கடித்து வரும் அனுஷ்கா, தற்போது இந்தியிலும் அறிமுகமாக இருக்கிறார்.

பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிக்க, எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்க இருக்கும் படம் 'Baahubali'. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் இப்படம் தயாராக இருக்கிறது.

ஜுலை மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்தியில் தயாராக இருக்கும் படத்தில் அனுஷ்கா வேடத்தில் சோனாக்ஷி சின்கா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

அத்தகவலை படக்குழு மறுத்து இருக்கிறது."தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் மட்டுமே படத்தினை தயாராக இருக்கிறோம். இந்தியில் டப் செய்ய இருக்கிறோம். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளுலும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. படக்குழுவில் எந்த ஒரு மாற்றமும் இல்லை " என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

இப்படத்திற்காக பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது படக்குழு. சுமார் 80 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close