வெளியிடப்பட்ட நேரம்: 13:38 (13/06/2013)

கடைசி தொடர்பு:13:38 (13/06/2013)

'சிக்ஸ் பேக்' வரிசையில் ஜூனியர் என்.டி.ஆர்!

நம்ம ஊரு நாயகர்கள் சூர்யா, சிம்பு, விஷால், பரத் வரிசையில் அக்கட பூமியான ஆந்திர தேசத்து நாயகன் ஜூனியர் என்.டி.ஆரும் 'சிக்ஸ் பேக்' வைத்துள்ளார்.

ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் - சமந்தா மற்றும் ஸ்ருதிஹாசன் ஜோடி சேரும் படம் 'ராமையா வத்சவய்யா.' எஸ்.எஸ்.தமன் இசையமைக்கும் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக தன்னுடைய உடலை வருத்தி சிக்ஸ் பேக் வைத்துள்ளார் ஜூனியர் என்.டி.ஆர்.  அவருடைய ரசிகர்களுக்கு இந்தப்படம் விருந்தாக அமையும் என்கிறார் இயக்குநர் ஹரிஷ்.

பட வேலைகள் அனைத்தும் முடிந்து வருகிற ஆகஸ்ட் மாதம் படம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்