சேனல் உரிமை ரூ.9 கோடி

பவன் கல்யாண் - த்ரிவிக்ரம் இணந்துள்ள படத்தின் வியாபாரத்தை ஆந்திரத் திரையுலகம் வியப்போடு பார்க்கிறது. பவன் கல்யாண், சமந்தா, ப்ரணீதா மற்றும் பலர் நடித்துள்ள படத்தினை த்ரிவிக்ரம் இயக்கி வருகிறார்.

படத்தினை பி.வி.எஸ்.என். பிரசாத் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து பிரம்மாண்டமாகத்  தயாரித்து வருகிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

‘ஜல்சா’ கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் படம் துவங்கியதில் இருந்தே பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில் படத்தின் டிவி உரிமையை முன்னணி டிவி நிறுவனம் சுமார் 9 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறது.

இதற்கு முன்பு வெங்கடேஷ், மகேஷ் பாபு நடித்த SVSC படம் 7.5 கோடி ரூபாய்க்கும், ஜுனியர் என்.டி.ஆர் நடித்த BAADSHAH படம் 7 கோடி ரூபாய்க்கும் விலை போனதே சாதனையாக கருதப்பட்டது.

இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. தற்போது படக்குழு ஐரோப்பா மற்றும் ஸ்பெயின் நாட்டிற்கு படப்பிடிப்பிற்கு சென்றுள்ளது. வெளிநாட்டிற்கு கிளம்பும் முன்பு படத்தின் FIRST LOOK POSTER-ஐ வெளியிட தீர்மானித்தார்கள். ஆனால், ஏனோ திட்டத்தினை கைவிட்டு விட்டு சென்று இருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!