ஆந்திராவில் பிஸியாகும் ஸ்ருதி! | ஸ்ருதிஹாசன், பவன் கல்யாண், கப்பார் சிங், காஜல் அகர்வால்

வெளியிடப்பட்ட நேரம்: 12:32 (19/06/2013)

கடைசி தொடர்பு:12:32 (19/06/2013)

ஆந்திராவில் பிஸியாகும் ஸ்ருதி!

ஆந்திராவில் பவன் கல்யாணுடன் ஸ்ருதி நடித்த 'கப்பார் சிங்' சூப்பர் டூப்பர் ஹிட். அக்கட தேசத்து மக்களுக்கு ஸ்ருதியை பிடித்துப்போக, 'பலுபு', 'எவடு', 'ராமய்யா வத்சவய்யா' என அம்மணிக்கு அங்கு படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

முதன்முதலாக சினிமாவில் கால்பதித்த 'லக்' இந்திப் படம் லக்காக அமையாவிட்டாலும், தற்போது 'டி டே' என்ற இந்திப் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், 'கப்பார் சிங்' இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். இதிலும் பவன் கல்யாண் தான் ஹீரோ. ஆனால், ஹீரோயினாக நடிக்க காஜலிடம் கேட்டுள்ளனர். அவர் சொன்ன சம்பளத்தைக் கேட்டதும் தயாரிப்பாளருக்கு மயக்கமே வந்துவிட்டதாம்.

பவன் கல்யாண் ஸ்ருதியை சிபாரிசு செய்ய, மறுபடியும் ஸ்ருதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் ஆந்திராவில் பிஸியான நடிகையாகி விட்டார் ஸ்ருதி. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close