அனுஷ்காவுக்கு 5 கோடி ரூபாய் நகைகள்! | அனுஷ்கா

வெளியிடப்பட்ட நேரம்: 14:11 (02/07/2013)

கடைசி தொடர்பு:14:11 (02/07/2013)

அனுஷ்காவுக்கு 5 கோடி ரூபாய் நகைகள்!

தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் அனுஷ்கா நடித்து வரும் 'ராணி ருத்ரம்மா தேவி' படத்தில், 5 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை அணிந்து நடித்து வருகிறார்.

ஹ்ருத்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்த 'ஜோதா அக்பர்' படத்தில் காஸ்டியூம் டிசைனராகப் பணிபுரிந்த நீதா லுல்லா தான் இந்தப் படத்திற்கும் காஸ்டியூம் டிசைனர்.

தங்கம், வைரம் பதிக்கப்பட்டு மிகப் பிரம்மாண்டமாக நகைகளும், ஆடைகளும் உருவாக்கப்பட்டுள்ளதாம். 'ஒக்கடு' புகழ் (தமிழில் 'கில்லி') குணசேகரன் இயக்கும் இந்தப் படத்திற்காக 40 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்துள்ளார்களாம்.

'ஜோதா அக்பர்' ஐஸ்வர்யா ராயைவிட, அனுஷ்காவின் ஆடைகளும், நகைகளும் அதிகமாகப் பேசப்படும் என்கிறார்கள்.

3டி-யில் படமாக்கப்படும் முதல் சரித்திரப்படம் என்ற புகழைப் பெறும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். ராணா, பிரகாஷ் ராஜ், கிருஷ்ணம் ராஜு, பாபா ஷேகல் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

தோட்டாதரணி அரங்கம் அமைக்க, அஜய் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார். இதுவரை 35 நாட்கள் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளது. டிசம்பருக்குள் மொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ளது.

தென்னிந்தியத் திரையுலகம் மட்டுமல்லாது, இந்தியத் திரையுலகமே வியக்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close