பிரபுதேவாவிடம் எகிறிய ஸ்ருதி! | பிரபுதேவா, ஸ்ருதி ஹாசன், ராமய்யா வத்சவய்யா, உனக்கும் எனக்கும்

வெளியிடப்பட்ட நேரம்: 15:28 (05/07/2013)

கடைசி தொடர்பு:15:28 (05/07/2013)

பிரபுதேவாவிடம் எகிறிய ஸ்ருதி!

தமிழ், தெலுங்கில் வெற்றிபெற்ற 'உனக்கும் எனக்கும்' படத்தை இந்தியில் இயக்கி உள்ளார் பிரபுதேவா. படத்தின் பெயர் 'ராமய்யா வத்சவய்யா.'

'ஜெயம்' ரவி கேரக்டரில் க்ரிஷும், த்ரிஷா கேரக்டரில் ஸ்ருதி ஹாசனும் நடித்துள்ளனர். ஜூலை 19-ம் தேதி படம் வெளியாகிறது.

பாடல் காட்சியின்போது பிரபுதேவா சொல்லிக்கொடுத்த சில நடன அசைவுகளை ஸ்ருதி சரியாகச் செய்யவில்லையாம். பொறுமையாக சொல்லிக்கொடுத்த பிரபுதேவா, ஒருகட்டத்தில் பொங்கி எழுந்து கடுமையாக 'டோஸ்' விட்டாராம்.

ஸ்ருதியும் பதிலுக்கு எகிறி இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையில் பயங்கர மனஸ்தாபமாம்.

ஜூலை 19-ம் தேதி படம் ரிலீஸ் என்பதால், புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் பிரபுதேவா. புரமோஷன் என்றால் படத்தின் ஹீரோவும், ஹீரோயினும் வரவேண்டுமே..?

ஆனால், ஸ்ருதி எங்குமே வருவதில்லையாம். இதனால் படத்தில் ஒருசில சீன்களில் நடித்துள்ள ஜாக்குலினை வைத்து புரமோஷன் வேலைகளைச் செய்து வருகிறாராம் பிரபுதேவா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்