சந்தானத்தின் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்! | சந்தானம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

வெளியிடப்பட்ட நேரம்: 15:06 (08/07/2013)

கடைசி தொடர்பு:15:06 (08/07/2013)

சந்தானத்தின் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்!

தெலுங்கு காமெடி நடிகர் சுனில் ஹீரோவாகவும், சலோனி ஹீரோயினாகவும் நடித்த படம் 'மரியாதை ராமண்ணா.' 'நான் ஈ' எஸ்.எஸ்.ராஜமெளலி இந்தப் படத்தை இயக்கி இருந்தார்.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தை இந்தி, கன்னடம், பெங்காலியில் ரீமேக் செய்தனர். அங்கும் படம் சூப்பர் ஹிட்டாக, இப்போது தமிழிலும் ரீமேக் செய்யப் போகின்றனர்.

சந்தானம் தான் இந்தப் படத்தின் ஹீரோ. படத்திற்கு 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' எனப் பெயரிட்டு இருக்கின்றனர். பிவிபி நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

'உன்னாலே உன்னாலே', 'வேட்டைக்காரன்' போன்ற படங்களில் நடித்த காமெடி நடிகர் ஸ்ரீநாத் இயக்குகிறார். மறைந்த இயக்குனர் ஜீவாவின் உதவி இயக்குனரான இவர், ஏற்கெனவே 'முத்திரை' என்னும் படத்தை இயக்கியவர்.

'கொலவெறி' புகழ் அனிருத் இந்தப் படத்திற்கு இசை அமைக்கிறார். விரைவில் நாயகி உள்ளிட்ட மற்ற விவரங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்