பிரகாஷ்ராஜ் ஜோடியாக சினேகா? | சினேகா, பிரகாஷ்ராஜ், உன் சமையல் அறையில்

வெளியிடப்பட்ட நேரம்: 10:49 (11/07/2013)

கடைசி தொடர்பு:10:49 (11/07/2013)

பிரகாஷ்ராஜ் ஜோடியாக சினேகா?

2011-ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான மலையாளப் படம் 'Salt N' Pepper.' ரொமான்ஸ் + காமெடி கலந்த இந்தப் படம், உணவை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

இரண்டு தலைமுறைகளுக்கு இடையே ஏற்படும் காதல் எப்படி இருக்கும் என்பதை இந்தப் படத்தில் சொல்லி இருந்தார்கள். இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஒரே நேரத்தில் 3 மொழிகளிலும் இந்தப் படத்தை ரீமேக் செய்யப் போகின்றனர்.

தமிழில் 'உன் சமையல் அறையில்' என்றும், தெலுங்கில் 'உலவச்சாறு பிரியாணி' என்றும் பெயர் சூட்டி இருக்கின்றனர். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் சினேகா ஹீரோயினாக நடிக்கிறார்.

கன்னடத்தில் யார் நடிப்பது என்றும், பெயரும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

ரொமான்ஸ் + உணவு தொடர்பான படம் என்பதால், மிகப்பெரிய நடிகர் ஒருவரை ஹீரோவாக்க முடிவு செய்திருக்கின்றனர். அப்படி யாருக் கிடைக்காத பட்சத்தில், பிரகாஷ்ராஜே ஹீரோவாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

இரண்டு தலைமுறைக்கு இடையே ஏற்படுகிற காதல்னா அதுதானே பொருத்தமா இருக்கும்?!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close