தாமதமாகிறதா 'நானி'யின் 'பைசா?' | பைசா, நானி

வெளியிடப்பட்ட நேரம்: 15:12 (12/07/2013)

கடைசி தொடர்பு:15:12 (12/07/2013)

தாமதமாகிறதா 'நானி'யின் 'பைசா?'

'நான் ஈ' படத்தின் ஹீரோ நானி நடித்த 'பைசா' எப்போது ரிலீஸாகும் என ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் ஆந்திர தேசத்தில் உள்ளவர்கள்.

நானி, கேத்ரின் தெரசா நடித்துள்ள தெலுங்குப் படம் 'பைசா.' கிருஷ்ண வம்சி இந்தப் படத்தை இயக்கி உள்ளார்.

பட வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டாலும், படம் எப்போது ரிலீஸாகும் என அறிவிக்காததால் குழப்பத்தில் தவிக்கின்றனர் நானியின் ரசிகர்கள்.

புரொமோஷன், பப்ளிசிட்டி என எந்த வேலையுமே இதுவரை தொடங்கவில்லையாம். படம் ரிலீஸாகுமா இல்லை பெட்டிக்குள்ளேயே தூங்கிவிடுமா என்பது தெரியவில்லை.

படத்தின் இயக்குநரான கிருஷ்ண வம்சி, இதுபற்றி வாய்திறப்பதே இல்லையாம். என்ன பிரச்னை என்பது தெரியாமல் படத்தின் ரிலீஸிற்காக காத்திருக்கிறார்கள் அக்கட தேசத்துக்காரர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்