ஏமாற்றிய அனுஷ்கா... காப்பாற்றிய மகேஷ்பாபு!

தெலுங்கில் தற்போது பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் படம் 'ருத்ரமாதேவி'. இப்படத்தில் 'ருத்ரமாதேவி'யாக நடித்து வரும் அனுஷ்கா மீது படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் குணசேகர் கடும் கோபத்தில் இருக்கிறாராம்.

காரணம் என்னவென்று விசாரித்ததில் சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.

'ருத்ரமாதேவி' படத்தை சுமார் 120 கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து இயக்கி வந்தார் குணசேகர். இப்படத்தில் அனுஷ்கா, ராணா, பிரகாஷ்ராஜ், கிருஷ்ணம் ராஜு, சுமன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

அதுமட்டுமன்றி இந்தியாவில் தயாராகி வரும் முதல் வரலாற்று 3D STEREOSCOPIC படம் இது. இவ்வாறு பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் படத்திற்கு அனுஷ்கா கடும் குடைச்சல் கொடுக்கிறாராம்.

"பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறீர்கள். அதனால் சம்பளத்தை அப்புறமாக வாங்கிக் கொள்கிறேன்" என்று கூறிவிட்டாராம் அனுஷ்கா. தற்போது இயக்குனரே தயாரிப்பாளர் என்பதால் பட்ஜெட்டைவிட அதிகமாக செலவு செய்து விட்டாராம். இதனால் பணம் இல்லாமல் தவித்து இருக்கிறார். அந்த சமயம் பார்த்து "எனக்கு உடனே சம்பளத்தை செட்டில் செய்யுங்கள்" என்று அதிர்ச்சி அளித்து இருக்கிறார் அனுஷ்கா.

சம்பளத்தை செட்டில் செய்துவிட்டு படத்தினை எப்படி விளம்பரப்படுத்தலாம் என்று ஆலோசனை செய்திருக்கிறார். படம் பெரிய பட்ஜெட் என்பதால் வியாபாரம் ஆவதற்கு பெரிய நடிகர் யாரையாவது சிறுவேடத்தில் நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.

இதைக் கேள்விப்பட்ட மகேஷ்பாபு உடனே இயக்குனர் குணசேகருக்கு போன் செய்து, " நான் நடித்து தருகிறேன்... நீங்கள் கவலைப்பட வேண்டாம். எனக்கு சம்பளம் தேவையில்லை" என்று இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்.

தனது திரையுலக வாழ்க்கையில் 'Okkadu' என்ற மிகப்பெரிய ஹிட் படத்தினைக் கொடுத்தவர் குணசேகர் என்பதால் தான் மகேஷ்பாபு சம்பளம் இல்லாமல் நடித்துக் கொடுக்க சம்மதம் தெரிவித்தாராம். மகேஷ்பாபு சம்பந்தப்பட்ட காட்சிகளை வெளிநாட்டில் 3D ஸ்டுடியோவில் வைத்து படமாக்கி இருக்கிறார்கள்.

'ருத்ரமாதேவி' படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெற இருக்கிறது. தற்போது மகேஷ்பாபுவை புகழ்ந்து தள்ளிவருகிறாராம் இயக்குனர் குணசேகர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!