கத்தியால் குத்திய மகேஷ்பாபு - காயம்பட்ட அனுஷ்கா! | அனுஷ்கா, மகேஷ்பாபு, பிரகாஷ்ராஜ், ருத்ரம்மா தேவி

வெளியிடப்பட்ட நேரம்: 11:18 (24/07/2013)

கடைசி தொடர்பு:11:18 (24/07/2013)

கத்தியால் குத்திய மகேஷ்பாபு - காயம்பட்ட அனுஷ்கா!

'ருத்ரமாதேவி' படத்தை சுமார் 120 கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து இயக்கி வருகிறார் குணசேகர். இந்தியாவில் தயாராகி வரும் முதல் வரலாற்று 3D STEREOSCOPIC படம் இது.

இந்தப் படத்தில் அனுஷ்கா, ராணா, பிரகாஷ்ராஜ், கிருஷ்ணம் ராஜு, சுமன், மகேஷ்பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்தப் படத்தில், 5 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை அணிந்து நடித்து வருகிறார் அனுஷ்கா.

மேலும், இந்தப் படத்தில் நடிப்பதற்காக உடம்பைக் குறைத்து, குதிரை சவாரி, வாள் சண்டை என அனைத்தையும் கற்றுள்ளார்.

சமீபத்தில் மகேஷ்பாபுவும், அனுஷ்காவும் மோதிக்கொள்வது போல சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. அனுஷ்கா குதிரையில் ஏறி தப்பித்துப் போகும்போது மகேஷ்பாபு அவரை நோக்கி கத்தியை வீசுவார்.

இந்தக் காட்சியைப் படமாக்கும்போது மகேஷ்பாபு வீசிய அட்டைக்கத்தி, நிஜமாகவே அனுஷ்காவைக் குத்திவிட்டதாம். குத்தியது அட்டைக்கத்தி என்பதால் சிறிய காயம் தானாம்.

உடனடியாக முதலுதவி செய்யப்பட்டு, தொடர்ந்து அந்தக் காட்சியில் நடித்தாராம் அனுஷ்கா. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்