மலையாளத்தில் நடிக்கும் வேதிகா! | வேதிகா, பரதேசி, சித்தார்த், காவியத் தலைவன், வசந்தபாலன், திலீப்

வெளியிடப்பட்ட நேரம்: 10:49 (26/07/2013)

கடைசி தொடர்பு:10:49 (26/07/2013)

மலையாளத்தில் நடிக்கும் வேதிகா!

'மதராசி' படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வேதிகா. முதலில் சூர்யாவுடன் ஒரு பிஸ்கட் விளம்பரத்தில் நடித்தார். அதைப் பார்த்து அர்ஜுன் 'மதராசி' படத்துக்கு கேட்க, நடிகையானார்.

அதைத் தொடர்ந்து 'ஜெய் சந்தோஷி மா' என்ற இந்திப்படத்தின் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமானார். மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படுவதாக இருந்த அந்தப் படம் கைவிடப்பட்டது.

இதனால் தென்னிந்திய மொழிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும்படி எந்த கதாபாத்திரமும் அமையவில்லை.

பாலாவின் இயக்கத்தில் நடித்த 'பரதேசி' நல்ல பெயரை வாங்கித் தந்தது. அதைத் தொடர்ந்து வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த் ஜோடியாக 'காவியத்தலைவன்' படத்தில் நடிக்கிறார்.

தென்னிந்திய மொழிகளில் மலையாளத்தை மட்டும் விட்டுவைத்திருந்த வேதிகா, இப்போது அங்கும் கால் பதிக்கிறார்.

ஜோஸ் தாமஸ் இயக்கும் 'ஸ்ரீங்கார வேலன்' படத்தில் வேதிகா தான் ஹீரோயின். திலீப் ஹீரோவாக நடிக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்