சமந்தாவின் பெரிய மனசு!

பொதுச்சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் நடிகைகளின் பட்டியல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

த்ரிஷா, ஸ்ரேயா, ஹன்சிகா லிஸ்டில் சமந்தாவும் இணைந்திருப்பதுதான் லேட்டஸ்ட் டாக்.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக பிரதியுஷா ஃபவுண்டேஷனை ஆரம்பித்திருக்கிறார் சமந்தா. இதில் மஞ்சுளா, பமீலா, சிரிஷ் ஆகிய மூன்று டாக்டர்கள் சேவை செய்கிறார்கள்.

பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கான சிகிச்சையை டாக்டர் மஞ்சுளா கவனித்துக் கொள்கிறார்.

ஹீமோபிலியா, தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டாக்டர் பமீலா சிகிச்சை அளிக்கிறார்.

குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே ஏற்படும் புற்றுநோய் குறித்த சிகிச்சைகளை டாக்டர் சிரிஷ் கவனித்துக் கொள்கிறார்.

இதற்காக எங்கும் நன்கொடைகளைப் பெறுவதில்லை. தன்னுடைய பொருளாதாரத்தில் இருந்தே செலவு செய்கிறேன் என்று சமர்த்தாகச் சொல்கிறார் சமந்தா.

சமந்தாவின் இந்த உதவும் உள்ளத்தை கோலிவுட், டோலிவுட் பாராட்டிக்கொண்டு இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!