மோகன்லாலுக்கு ஜோடியான சிம்ரன்! | மோகன்லால், சிம்ரன், மீனா, தேவயானி, ஜீத்து ஜோசப்

வெளியிடப்பட்ட நேரம்: 12:04 (03/08/2013)

கடைசி தொடர்பு:12:04 (03/08/2013)

மோகன்லாலுக்கு ஜோடியான சிம்ரன்!

திருமணமாகி குழந்தை குட்டிகளுடன் செட்டில் ஆனவர்களைக் கூட பாரபட்சம் காட்டாமல் ஹீரோயினாக்கி சந்தோஷப்பட்டுக் கொள்ளும் மலையாள சினிமா. அந்த வரிசையில் சிம்ரனும் சேர்ந்திருக்கிறார்.

தேவயானி திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகு மோகன்லால் ஜோடியாக ‘பாலேட்டன்’ படத்தில் நடித்தார். அதேபோல் மீனாவுக்கும் ஒரு ஹீரோயின் ரோல் மலையாளத்தில் கிடைத்திருக்கிறது.

சிம்ரனை மட்டும் விட்டு வைப்பானேன். ஜீத்து ஜோசப்பின் புதிய படத்தில் மோகன்லால் ஜோடியாக சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

மலையாள சினிமாவின் நவீன இயக்குனர்களில் ஜீத்து ஜோசப்பும் ஒருவர். இவரின் ‘மெமரிஸ்’ படம் ஆகஸ்ட் 9-ம் தேதி ரம்ஜானுக்கு வெளியாகிறது.

போலீஸ் அதிகாரி ஒருவர் ஆல்கஹாலுக்கு அடிமையாவதுதான் படத்தின் கதை. பிருத்விராஜ் தான் ஹீரோ. 'மும்பை போலீஸ்' படத்தில் போலீஸாக நடித்த சூட்டோடு இதிலும் போலீஸாக நடித்திருக்கிறார்.

ரம்ஜானுக்கு வெளியாகும் நான்கு படங்களில் மெமரிஸுக்குதான் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறதாம் கேரளாவில். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்