நடிகர் சூர்யா பாடிய முதல் பாடல்! | சூர்யா, பாடல், கார்த்தி, ஜோதிகா, சன் ரைஸ் காபி

வெளியிடப்பட்ட நேரம்: 12:09 (20/08/2013)

கடைசி தொடர்பு:12:09 (20/08/2013)

நடிகர் சூர்யா பாடிய முதல் பாடல்!

'சிங்கம்-2' வெற்றியைத் தொடர்ந்து சூர்யாவின் மார்க்கெட் ஏகத்துக்கும் எகிறி இருக்கிறது. நடிகர் என்பதைத் தாண்டி சமூக விஷயங்களிலும் அக்கறை காட்டி வருகிறார். தன்னுடைய 'அகரம் பவுண்டேஷன்' மூலம் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்.

'சிங்கம்-2' படத்தை தன்னுடைய '2டி எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் மூலம் வெளியிட்டு, சிறந்த தயாரிப்பாளர் என்ற புகழையும் பெற்றுள்ளார்.

இப்படி சினிமாவின் பல துறைகளிலும் கால் பதித்து வெற்றிக்கொடி நாட்டிவரும் சூர்யா, தற்போது பாடகர் அவதாரத்தையும் எடுத்துள்ளார். 

பிரபல நிறுவனத்தின் விளம்பரத்துக்காக ஒரு பாடலைப் பாடியுள்ளார் சூர்யா. அவர் பாடியதை வீடியோவாக எடுத்து தனது டிவிட்டர் இணையத்தில் வெளியிட்டுள்ளார் பாடகர் கார்த்திக். இவர், பல படங்களில் சூர்யாவுக்காக பின்னணி பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவை லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்