ஹரிக்கு ரூ.5 கோடி சம்பளம்! | சூர்யா, கார்த்தி, ஹரி, சிங்கம்-2, ஸ்டுடியோ க்ரீன், ஜூனியர் என்.டி.ஆர்

வெளியிடப்பட்ட நேரம்: 14:24 (22/08/2013)

கடைசி தொடர்பு:14:24 (22/08/2013)

ஹரிக்கு ரூ.5 கோடி சம்பளம்!

சூர்யாவை இயக்கும் இயக்குநர், அடுத்த படத்தை கார்த்தியை வைத்து இயக்குவார். அதேபோல, கார்த்தியை இயக்கும் இயக்குநர், அடுத்த படத்தில் சூர்யாவை இயக்குவார்.

இந்த கொடுக்கல் வாங்கல் பல காலமாக நடந்து வருகிறது. இதை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் கண்ணும் கருத்துமாகச் செய்து வருகிறது.

அப்படித்தான் 'சிங்கம்-2' படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போதே அடுத்து கார்த்திக் படத்தை இயக்குவதாக ஒப்புக் கொண்டார். ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பதாக இருந்தது.

'சிங்கம்-2' வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்த ஜூனியர் என்.டி.ஆர்., தன்னை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என ஹரியிடம் கேட்க, அவரும் ஓ.கே. சொல்லிவிட்டார்.

சம்பளம் ரூ.5 கோடி என்றதும், கார்த்தியின் படத்தை டிராப் செய்துவிட்டு ஜூனியர் என்.டி.ஆரை வைத்து தெலுங்கில் ஆக்‌ஷன் கதயொன்றை இயக்கப் போகிறார் ஹரி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்