ஆந்திராவைக் கலக்க வரும் அல்லு சிரிஷ்!

அக்கட பூமியிலுள்ள மெகா குடும்பத்தின் வாரிசு, ஹீரோ அல்லு சிரிஷ். தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் மகன். ஆக்ஷன் ஹீரோ அல்லு அர்ஜூன் தம்பி.
 
‘கௌரவம்’ படத்தின் மூலம் அறிமுக ஹீரோவாக களம் இறங்கியவர், இப்போது டோலிவுட்டில் அடுத்த படத்துக்கு ரெடியாகிவிட்டார். 'கேடி பில்லா கில்லாடி ரங்கா'வில் கவனம் ஈர்த்த ரெஜினாவுடன் கைகோர்க்கும் சிரிஷ் நடிக்கும் படம் ‘கொத்தஜன்டா.'

‘‘ 'கௌரவம்' படம் சரியா ரீச் ஆகலைன்னாலும், இப்படி ஒரு படத்துல அறிமுகம் ஆனதுக்காக பெருமைப்படறேன். மும்பையில மாஸ் கம்யூனிகேஷன் படிச்சுக்கிட்டு இருக்கும்போது, 'தயாரிப்பாளர் வேலைகளை இந்தி 'கஜினி'  படத்துல மட்டும் செய். அப்புறம் உனக்குப் பிடிச்சதை செய்’னு அப்பா சொன்னாரு.

ஷூட்டிங் ஸ்பாட்ல அமீர்கான் சாரைப் பார்த்து நடிப்புல சில விஷயங்களைக் கத்துக்கிட்டேன். அப்போது என் நடிப்பு ஆர்வத்தைக் கவனிச்ச முருகதாஸ் சார், ‘நீங்க ஹீரோவா நடிக்கலாமே தம்பி... தயங்காம நடிங்க'னு சொன்னார். அப்புறம் தான் ஹீரோவாக முடிவெடுத்தேன்.

'நான் நடிக்கலாம்னு இருக்கேன் மாமா'ன்னு சிரஞ்சீவி முன்னாடி போய் நின்னேன். ‘எதுவா இருந்தாலும் இங்கே கஷ்டப்பட்டுதான் ஆகணும். எதுவுமே இங்க ஈஸியா  கிடைக்காது. ஹீரோவாகும்போது உனக்குன்னு ஆடியன்ஸ் கிடைப்பாங்க. அவங்க உன்கிட்ட நிறைய எதிர்பார்ப்பாங்க. அதை நீதான் நிறைவேத்தணும். பெருசா பண்ணனும்னு பிரஷரை ஏத்திக்காதே. ஸ்டெப் பை ஸ்டெப்பா பண்ணு’னு சொன்னார்.

நான் சினிமாவுல போக வேண்டிய தூரம் இன்னும் இருக்கு. ‘கொத்தஜன்டா’ என்னை முழுசா நிரூபிக்கும்" என்கிறார் சிரிஷ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!