வெளியிடப்பட்ட நேரம்: 13:24 (07/09/2013)

கடைசி தொடர்பு:13:24 (07/09/2013)

தமிழில் நஸ்ரியாவுடன் ஜோடி சேரும் மம்முட்டி மகன்!

'காதலில் சொதப்புவது எப்படி' படத்தின் மூலம் பளிச் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் பாலாஜி மோகன். குறும்பட இயக்குநர்களின் ஹிட் அலைவரிசையை ஆரம்பித்து வைத்தவர்.

இப்போது அடுத்த படம் இயக்கத் தயாராகிவிட்ட பாலாஜி மோகன், மம்முட்டி மகன் துல்கர் சல்மானை தமிழில் அறிமுகப்படுத்துகிறார்.

துல்கர் சல்மானை தமிழில் நடிக்க வைக்க பலர் முயற்சி செய்தனர். ஜேடி ஜெர்ரி இயக்க்கும் படத்தில் கூட துல்கர் சல்மானை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தைகள் நடந்தன.

ஆனால், அது பாலாஜி மோகன் படத்தில்தான் சாத்தியமாகி இருக்கிறது. துல்கர் சல்மான் ஜோடியாக நஸ்ரியா நடிக்கிறார்.

ஏற்கனவே 'சலால மொபைல்ஸ்'எனும் மலையாளப் படத்தில் துல்கர் சல்மான்னும், நஸ்ரியாவும் ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்