அதிர்ச்சியில் ஆந்திரத் திரை உலகம்! | andhra, tollywood, trivikram, த்ரிவிக்ரம், ஆந்திரா, தசரா

வெளியிடப்பட்ட நேரம்: 15:24 (23/09/2013)

கடைசி தொடர்பு:15:24 (23/09/2013)

அதிர்ச்சியில் ஆந்திரத் திரை உலகம்!

'Attharintiki Daaredi' திரைக்கு வரும் முன்னரே முழுப்படமும் இணையத்தில் வெளியானதால், ஆந்திரத் திரையுலகம் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறது.

பவன் கல்யாண், சமந்தா மற்றும் பலர் நடிக்க, த்ரிவிக்ரம் இயக்கியுள்ள படம் 'Attharintiki Daaredi.' தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க, பி.வி.எஸ்.என். பிரசாத் தயாரித்து இருக்கிறார். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, படம் வெளியீட்டிற்குத் தயாராக இருந்தது.

பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘கபார் சிங்’ படம் ஆந்திராவில் வசூலை அள்ளியது. அவரது நடிப்பில் அடுத்து 'Attharintiki Daaredi' படம் தான் வெளியாகிறது என்பதால் ஏகத்திற்கும் எதிர்பார்த்தார்கள்.

ஆகஸ்ட் 9-ம் தேதி படத்தினை வெளிக்கொண்டு வரத் திட்டமிட்டார்கள். ஆனால், தெலுங்கானா பிரச்னை வலுவானதால், அங்கு எந்தப் படமும் வெளியாகவில்லை. இப்படத்தின் தயாரிப்பாளரும் வெளியீட்டுத் தேதியினை அறிவிக்காமல் ஒத்திவைத்தார்.

பெரிய பட்ஜெட் படம் என்பதால், சுமார் இரண்டு மாதங்கள் கழித்து தசரா விடுமுறையை மனதில் வைத்து, அக்டோபர் 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்கள்.

ஆனால், ‘Attharintiki Daaredi’ முழுத்திரைப்படமும் இணையத்தில் வெளியாகிவிட்டது. இதனால் அதிர்ச்சியில் உறைந்துபோன படக்குழு, உடனடியாக படத்தினை செப்டம்படர் 27-ம் தேதி வெளியிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.

படக்குழுவினர் தங்களது ட்விட்டர் தளத்தில், “ ‘Attharintiki Daaredi’ படத்தில் நிறைய பேரின் உழைப்பு அடங்கிருக்கிறது. அதுமட்டுமல்ல, படத்தின் பட்ஜெட்டும் மிக அதிகம். ஆகையால், அனைவருமே தயவுசெய்து தியேட்டரில் படத்தினை ரசியுங்கள். Piracy லிங்குகளை ad@apfilmchamber.com மற்றும் legal@apfilmchamber.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்புங்கள். அல்லது 1800 4250 111 - 94901 64545 என்ற டோல் ப்ரீ எண்ணிற்கும் தெரிவிக்கலாம்” என்று கூறியுள்ளார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close