வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (30/09/2013)

கடைசி தொடர்பு:12:20 (30/09/2013)

காப்பாற்றுவாரா ஸ்ரேயா?

பழைய தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ், அவருடைய மகன் நாகர்ஜுனா, பேரன் நாகசைதன்யா மூவரும் இணைந்து நடிக்கும் தெலுங்குப் படம் 'மனம்.'

இந்தப் படத்தில் நாகர்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ரேயா. நாகசைதன்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். விக்ரம் குமார் இந்தப் படத்தை இயக்குகிறார்.

தெலுங்கில் விக்ரம் குமார் முதன்முதலில் இயக்கிய 'இஷ்டம்' படத்தில், ஸ்ரேயா தான் கதாநாயகி. அந்தப் படம் தனக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்ததால், சென்டிமெண்ட்டுக்காக இந்தப் படத்திலும் ஸ்ரேயாவை நடிக்க வைத்துள்ளார்.

அதோடு, கதையில் மிகப்பெரிய முக்கியமில்லாத நாகர்ஜுனா ஜோடிக்கு ஸ்ரேயாவை ஓ.கே. செய்திருப்பதால், அந்த கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கதையில் சில மாறுதல்களையும் செய்திருக்கிறாராம்.

இந்த விக்ரம் குமார் தான் தமிழில் 'அலை', 'யாவரும் நலம்' படங்களை இயக்கியவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்