கடத்தியாவது நடிக்க வைக்கலாம்!

ரம்யா கால்ஷீட் பிரச்னை செய்வதால் அவரைக் கடத்திச் சென்று ஷூட்டிங் நடத்தலாம் என்று கன்னட ஹீரோ சிவராஜ்குமார் தெரிவித்த கருத்தால், நடிகை ரம்யா கொதிப்படைந்துள்ளார்.

கர்நாடகா இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரம்யா நடிப்புக்கு முழுக்கு போடுவதாக அறிவித்தார். இதனால் இவர் ஒப்புக்கொண்டிருந்த 'நீர் டோஸ்' உள்ளிட்ட சில கன்னடப் படங்களின் ஷூட்டிங் தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
 
'நீர் டோஸ்' படத்தில் பாலியல் தொழிலாளி வேடத்தில் ரம்யா நடிக்க இருந்தார். எம்.பி ஆன பிறகு அப்படி நடிப்பது தனது இமேஜை பாதிக்கும் என்று கூறி நடிக்க மறுத்தார். இதைத் தயாரிப்பாளர் ஜக்கேஷ் ஏற்கவில்லை.

ரம்யா மீது பிலிம்சேம்பரில் புகார் அளித்தார். இருதரப்பினரிடமும் பிலிம்சேம்பர் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டது.

ஜனவரி மாதத்திற்குள் படத்தில் நடித்துக் கொடுப்பதாக ரம்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கன்னட ஹீரோ சிவராஜ்குமார் நடிக்கும் 'ஆர்யன்' ஷூட்டிங்கில், ரம்யா பங்கேற்றார்.

''ரம்யா கால்ஷீட் கிடைப்பது அரிதாக இருக்கிறது. இப்போது செட்டுக்கு வந்திருக்கிறார். அவரைத் தனி விமானத்தில் கடத்திச் சென்று எங்கெல்லாம் ஷூட்டிங் நடத்தவேண்டுமோ அங்கு நடிக்கவைத்துவிட்டு திரும்பவும் கொண்டு வந்துவிட்டுவிடலாம்'' என்று வேடிக்கையாக சிவராஜ்குமார் கூறி இருக்கிறார்.

சிவராஜ்குமார் சொன்னது  ரம்யாவுக்குக் கோபத்தை ஏற்படுத்தி இருப்பதால், கன்னட சினிமாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.Do you like the story?

Please Appreciate the Author by clapping!