த்ரிஷாவின் சம்பளம்? | த்ரிஷா, trisha

வெளியிடப்பட்ட நேரம்: 14:28 (16/12/2013)

கடைசி தொடர்பு:14:28 (16/12/2013)

த்ரிஷாவின் சம்பளம்?

த்ரிஷா சினிமாவில் நடிக்க ஆரம்பித்து, ஹீரோயினாக அறிமுகமாகி பத்து ஆண்டுகளைக் கடந்துவிட்டார்.

இதுவரை தமிழ், இந்தி, தெலுங்குப் படங்களில் மட்டுமே த்ரிஷா நடித்துள்ளார்.இப்போது முதன் முறையாக ஒரு கன்னடப் படத்தில் நடிக்க இருக்கிறார்.

தெலுங்கில் ஹிட்டடித்த 'தூக்குடு' படத்தின் கன்னட ரீமேக்கில் புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கிறார்.இதில் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.

இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க த்ரிஷா ஒரு கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இன்னொரு பக்கம், த்ரிஷாவுக்கு 25லட்சம் தான் சம்பளம். கன்னடப் படங்களில் நடிக்க அவ்வளவு சம்பளம் தரப்படுவதில்லை என்ரும் சொல்லப்படுகிறது.

அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகிறது. பிப்ரவரியில் ஷூட்டிங் முடியும் என்று சொல்லப்படுகிறது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close