வெளியிடப்பட்ட நேரம்: 16:17 (30/12/2013)

கடைசி தொடர்பு:16:17 (30/12/2013)

ராம் சரணுடன் இணையும் தீபிகா படுகோனே!

ராம் சரண் தேஜா, பிரியங்கா சோப்ரா, சஞ்சய் தத் ஆகியோர் நடித்து கடந்த செப்டம்பரில் வெளியான 'ஜாஞ்சீர்'. படம் பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்த்த கலெக்ஷனை அள்ளவில்லை.
 
தெலுங்கு மற்றும் இந்தியில் 60 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் மொத்த வசூலே ரூ.,45 கோடிதான்.
 
இந்தத் தோல்வியை முறியடிக்கவேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார் ராம் சரண். அதற்காக, இயக்குனர் அஷுதோஷ் கோவரிகர் எடுக்க இருக்கும் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்காக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
 
இதில் ராம் சரணுக்கு  ஜோடியாக நடிப்பவர் தீபிகா படுகோனே. இந்தப் படமும் தெலுங்கு மற்றும் இந்தியில் எடுக்கப்படுகிறது.

தமிழில் ஏற்கனவே நடித்துவிட்ட தீபிகா, தற்போது தெலுங்கிலும் கால்வைத்துள்ளார். தீபிகா வரவால் இலியானா, நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் கவலையில் இருக்கிறார்களாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்