ஃபஹத் பாசிலைத் திருமணம் செய்யும் நஸ்ரியா!

மலையாளத்தில் ஹிட் நடிகர் ஃபஹத் பாசில். டைரக்டர் பாசில் மகன். 2013ல் மட்டும் 12 படங்களில் கமிட் ஆகி நடித்த மோஸ்ட் வான்டட் ஹீரோ.

முன்பு, ஆண்ட்ரியாவைக் காதலிக்கிறேன் என்று பரப்பைக் கிளப்பியவர் இப்போது திருமணத்துக்குத் தயாராகிவிட்டார்.

ஃபஹத் பாசிலின் மனம் கவர்ந்த அந்தப் பெண் நஸ்ரியா நசீம். 'நேரம்' படத்தில் அறிமுகமாகி, 'ராஜா ராணி, 'நய்யாண்டி' படங்களில் நடித்த அதே நஸ்ரியாதான்.

பெற்றோர்கள் நிச்சயித்த இவர்கள் திருமணம் வரும் ஆகஸ்டு மாதத்தில் நடைபெற இருக்கிறது.

முப்பது வயதான ஃபஹத் 18 வயதான நஸ்ரியாவைக் கரம் பிடிக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!