நஸ்ரியாவிடம் நான் மயங்கிவிட்டேன் - ஃபஹத் பாசில் உற்சாகம்!

நஸ்ரியாவுக்கும் ஃபஹத் பாசிலுக்கும் வரும் ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது.  

இருவரும் ‘எல் பார் லவ்’ என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். அப்போதுதான் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டார்களாம்.

நஸ்ரியாவுடன் காதல் மலர்ந்தது பற்றி ஃபஹத் பாசில் கூறும்போது, ''நஸ்ரியாவுக்கும் எனக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. நஸ்ரியாவிடம் நான் மயங்கி விட்டேன்.

அவரது காதல் என்னை மாற்றி விட்டது. என் குடும்பத்தினருக்கும் நஸ்ரியாவை மிகவும் பிடித்துள்ளது. நஸ்ரியாவோடு நான் உரையாடினேன். அப்போது காதல் வயப்பட்டேன்.

என்னைத் திருமணம் செய்து கொள்ளும் பெண் நிறைய பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டும்.

எனக்காக தன்னை தியாகம் செய்ய தயாராகவும் இருக்க வேண்டும். அதுமாதிரி ஒரு பெண்ணைத் தேடி வந்தேன்.

இறுதியில் அப்படிப்பட்டவராக நஸ்ரியாவை கண்டு பிடித்தேன்.நஸ்ரியாவைக் கடைசி வரை காதலிப்பேன். கடைசி வரை நன்றாக பார்த்து கொள்வேன்.'' என்று ஃபஹத் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!